Home
Mobile

"ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை"- பட்ஜெட் விலையில் முதன்மை ரகம்: வந்தது சியோமி 12, 12 ப்ரோ, 12 எக்ஸ்- 12ஜிபி ரேம்!

சியோமி நிறுவனம் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த தொடரில் மூன்று சாதனங்களின் வெளியீடு சீன சந்தையில் நடந்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான அம்சங்களோடு வருகின்றன. டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான எம்ஐயூஐ 13 தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கின் உடன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சீரிஸ் சியோமி 12, சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன்களும் எம்ஐயூஐ 13 இல் இயங்குகின்றன. இந்த போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை பார்க்கலாம்.

சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போனானது மூன்று விருப்பங்களில் வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43,400 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.47,000 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.51600 ஆகவும் இருக்கிறது. சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் இதே போன்ற சேமிப்பக கட்டமைப்புகளில் கிடைக்கிறது. ஆனால் இதன் விலை இந்திய மதிப்புப்படி ரூ.55,100 ஆக இருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

சியோமி 12 ப்ரோ மிட் மற்றும் ஹை எண்ட் மாடல்களின் விலை குறித்து பார்க்கையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.55,100 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.58,600 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.63,000 ஆகவும் இருக்கிறது. சியோமி 12 எக்ஸ் ஸமார்ட்போன் இந்த மூன்று வகைகளில் கிடைக்கும். இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.37,100 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.41,000 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.44,500 ஆகவும் இருக்கிறது.

சியோமி 12 அம்சங்கள்

சியோமி 12 அம்சங்கள்

சியோமி 12 அம்சங்கள் குறித்து பார்க்கையில், சியோமி 12 ஸ்மார்ட்போனானது 6.28 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வரும். இந்த ஸ்மார்ட்போன் டால்பி விஷன் ஆடியோ ஆதரவோடு வருகிறது. சியோமி 12 ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட் ஆகும். இந்த சாதனம் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

மூன்று பின்புற கேமராக்கள்

மூன்று பின்புற கேமராக்கள்

சியோமி 12 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகள் குறித்து பார்க்கையில், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார், 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை மேக்ரோ லென்ஸ் உடன் வருகிறது. இந்த கேமராவானது மேம்பட்ட ஃபோகஸ் செய்ய சைபர்ஃபோகஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா மற்றும் ஸ்டேக்கர் எச்டிஆர் மற்றும் ஏஐ தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

சியோமி 12 சாதனத்தின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.5, ஜிபிஎஸ், என்எஃப்சி, இன்ஃப்ரா ரெட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை உடன் வருகிறது. இந்த சாதனம் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகிறது. ஹார்மன் கார்டன் ட்யூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்

சியோமி 12 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.73 இன்ச் டபிள்யூக்யூ எச்டி ப்ளஸ் இஎஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் கூடிய காட்சியை கொண்டிருக்கிறது. ப்ரீமியம் ஐபோன்களில் ஆப்பிள் பயன்படுத்தும் குறைந்த வெப்பநிலை பாலிகிஸ்ட்லின் ஆக்சைடு பேக்பிளேன் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

இணைப்பு மற்றும் சேமிப்பு விருப்பங்கள்

இணைப்பு மற்றும் சேமிப்பு விருப்பங்கள்

இணைப்பு மற்றும் சேமிப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், சியோமி 12 ஸ்மார்ட்போனானது ப்ரோ மாடலை போன்றே வருகிறது. இந்த சாதனம் மூன்று 50 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிரத்யேக ட்வீட்டர் மற்றும் ஹர்மன் கார்டன் ட்யூனிங் ஆதரவு உட்பட நான்கு யூனிட் ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. ப்ரோ வேரியண்ட்டில் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அதேபோல் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த போன் வருகிறது.

சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.82 இன்ச் டிஸ்ப்ளே அமைப்போடு வருகிறது. மூன்று பின்புற கேமராக்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகள் குறித்து பார்க்கையில், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார், 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை மேக்ரோ லென்ஸ் உடன் வருகிறது. இந்த கேமராவானது மேம்பட்ட ஃபோகஸ் செய்ய சைபர்ஃபோகஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா மற்றும் ஸ்டேக்கர் எச்டிஆர் மற்றும் ஏஐ தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. இது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதன் ஹை எண்ட் வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12, xiaomi 12 pro, xiaomi 12X Launched With 50MP Camera, Snapdragon 8 Gen 1 Chipsets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X