Home
Mobile

அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனம் விரைவில் புதிய சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 12 அல்ட்ரா

சியோமி 12 அல்ட்ரா

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்
தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த
ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 12 அல்ட்ரா

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

மி 11 அல்ட்ரா

மி 11 அல்ட்ரா

மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது1,440x3,200 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. மி 11 அல்ட்ரா சாதனத்தின் பின்புறம் 1.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 126x294 பிக்சல் தீர்மானம் வசதி இடம்பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

மி 11 அல்ட்ரா

மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை வேகமாக இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய
சாதனம்.

சியோமி மி 11 அல்ட்ரா

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் 20எம்பி செல்பீ
கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

யோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அருமையான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், நாவிக் ஆதரவு, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி 11 Youth Vitality Edition

சியோமி 11 Youth Vitality Edition

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம். சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனைபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி 11 Youth Vitality Edition

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

யோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி

சியோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும்வீடியோக்களை எடுக்க முடியும். சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க
மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன்

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 33Wh பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன். ப்ராக்ஸிமிட்டி சென்சார்,கைரோஸ்கோப் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Ultra May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X