Home
Mobile

தரமான சிப்செட் உடன் போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருது சியோமி 12 அல்ட்ரா.!

சியோமி நிறுவனம் இப்போது அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில்லை. ஆனாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும் சும்மா நச்சுனு இருக்கும் ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்கிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அதன்படி இந்நிறுவனம் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த சியோமி 12 அல்ட்ரா சாதனம் வரும் ஜூலை மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில்
அறிமுகம் செய்யப்படும் என்று ஆன்லைனில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 யார் வெளியிட்ட தகவல்?

யார் வெளியிட்ட தகவல்?

மேலும் இப்போது சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது டிப்ஸ்டர் Yogesh Brar வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD AMOLEDடிஸ்பிளேவுடன் வெளிவரும். இதுதவிர டிஸ்பிளேவில் நிறைய அம்சங்கள் உள்ளன.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
சியோமி நிறுவனம். இதைவிட சிப்செட் வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் இந்த புதிய சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. அதாவது மீடியாடெக் சிப்செட்-ஐ விட தரம் வாய்ந்தது இந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கேமிங்,எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த அட்டகாசமான சிப்செட் வசதி.

சூப்பர் இயங்குதளம்

சூப்பர் இயங்குதளம்

8ஜிபி/12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய சாதனம் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்தசாதனத்தின் கேமரா விவரங்களைப் பார்ப்போம்.

 50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 48எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோகேமரா (5x optical zoom) என மொத்த மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே டிஎஸ்எல்ஆர் கேமராக்களே வேண்டாம் சியோமி ஸ்மார்ட்போன் போதும் என அனைவருக்கும் நினைக்க தோன்றும்.

அட்டகாசமான செல்பீ கேமரா

அட்டகாசமான செல்பீ கேமரா

அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய அம்சங்களும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே கேம் விளையாடவும்,வீடியோ பார்க்கவும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. விலைப் பற்றிய தகவல் வெளிவந்தால் உடனே அப்டேட் செய்கிறோம். குறிப்பாக வளைந்த டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சியோமி 12 அல்ட்ர சாதனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Ultra launches soon with Snapdragon 8+ Gen 1 chipset: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X