Home
Mobile

தரமான சிப்செட் உடன் அசத்தலான சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனம் புதிய சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. வரும் மே 2-ம் தேதி அமேசான், சியோமி வலைதளங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.62,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும்256ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.66,999-ஆக உள்ளது. குறிப்பாக நீலம், கருப்பு மற்றும் ஊதா நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.73-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 3200 x 1440 பிக்சல் தீர்மானம், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்டபல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில்

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் அட்ரினோ ஜிபி ஆதரவு மற்றும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார் + 50எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச்

குறிப்பாக சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, என்எப்சி, புளூடூத் 5.2,

5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, என்எப்சி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro With Snapdragon 8 Gen 1 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X