Home
Mobile

முதல்ல ரூ.8,000.. இப்போ ரூ.10,000.. இந்த Xiaomi போன் மீது மொத்தம் 18,000 விலைக்குறைப்பு!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சியோமி (Xiaomi) நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான வேகத்திலேயே இது ரூ.8000 என்கிற விலைக்குறைப்பை (Price cut) பெற்றது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது மீண்டும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ரூ.10,000 என்கிற மிகப்பெரிய விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) வருகிறது மற்றும் அந்த இரண்டுமே, இரண்டாவது விலைக்குறைப்பையும் சேர்த்து மொத்தமாக ரூ.18,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

இந்த Xiaomi போன் மீது மொத்தம் 18,000 விலைக்குறைப்பு!

சியோமி 12 ப்ரோவின் புதிய விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையை ரூ.62,999 மற்றும் ரூ.66,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. ரூ.8,000 என்கிற முதல் விலைக்குறைப்புக்கு (First Price cut) பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகவும், 12 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.58,999 ஆகவும் குறைந்தது.

இப்போது, ​​ரூ.10,000 என்கிற இரண்டாவது விலைக்குறைப்பிற்கு (Second Price cut) பின்னர் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.44,999 க்கும், 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.48,999 க்கும் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், சியோமி 12 ப்ரோ மாடல் நோயர் பிளாக் (Noir Black), ஓபரா மாவ் ( Opera Mauve) மற்றும் கோச்சர் ப்ளூ (Couture Blue) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.73-இன்ச் WQHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் (Snapdrogan 8 Gen 1 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

டால்பி அட்மோஸ்-க்கான (Dolby Atmos) ஆதரவு மற்றும் ஹர்மன் கார்டனின் குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டமுடன் (Quad-Speaker System) வரும் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 13 (MIUI 13) கொண்டு இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்707 வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா + 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 4600mAh பேட்டரியுடன் வருகிறது.

இதன் பேட்டரி 120W ஹைப்பர்சார்ஜ் டெக்னாலஜி, 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்குகிறது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்டாண்டர்ட் மோட்-ல் (Standard mode) சுமார் 24 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். அதுவே பூஸ்ட் மோட்-ல் (Boost Mode) வெறும் 18 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro Smartphone Received Rs 10000 Price Cut in India Now Available Under Rs 45000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X