அப்படி போடு: மெர்சலான இரண்டு போன்களுக்கு விலையைக் குறைத்த Xiaomi.! முந்துங்கள்.!
சியோமி நிறுவனத்தின் இரண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது சியோமி 12 ப்ரோ மற்றும் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன்களுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலை குறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது கடந்த ஆண்டு ரூ.25,999-விலையில் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை தற்போது ரூ.19,499-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் ரூ.62,999-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் வலைத்தளத்தில் ரூ.49,999-க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பாகத் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான MIUI 13 கொண்டு இயங்கும் ரெட்மி K50i 5ஜி ஆனது, 144Hz வரையிலான செவன்-லெவல் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 270Hz டச் சம்ப்ளிங் ரேட் உடனான 6.6-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்ப்ளே 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, HDR10 ஆதரவு, டால்பி விஷன் மற்றும் 650 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது. இந்த ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 SoC உடனாக 8ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான வேப்பர் கூலிங் (VC) சேம்பரை கொண்ட லிக்விட் கூலிங் 2.0 தொழில்நுட்பத்தையும் பேக் செய்கிறது.

Redmi K50i 5G ஆனது 6P லென்ஸுடன் இணைக்கப்பட்ட 64 மெகாபிக்சல் Samsung ISOCELL GW1 மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரும் உள்ளது. முன்பக்கத்தை
பொறுத்தவரை, இதில் f/2.45 அபெர்ச்சர் லென்ஸுடன் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி K50i 5ஜி ஆனது 256GB வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் v5.3, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் -சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது. பேட்டரியை பொறுத்தவரை 5,080mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இது தவிர்த்து டால்பி அட்மோஸ் உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீடு போன்றவைகளையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் ஆனது அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications