Home
Mobile

ஏப்ரல் 27: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி 12 ப்ரோ 5ஜி

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2K resolution, 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக கேமிங்உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும் என்றே கூறலாம். அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

சியோமி 12 ப்ரோ 5ஜி

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. குறிப்பாக கொரில்லா கிளாஸ் விக்டஸ்பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின்

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார்+ 50எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் + 50எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ்(2x ஆப்டிகல் ஜூம்) என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ,

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சியோமி 12 ப்ரோ 5ஜி

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120W ஃபாஸ்ட்-சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.குறிப்பாக ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலை விட தனித்துவமான அம்சங்களுடன் இந்த சியோமி 12 ப்ரோ 5ஜி மாடல் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro 5G with 64 Mega Pixel Camera Launching in India on April 27: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X