Home
Mobile

மரண ஆஃபருங்கோ.. இந்த Xiaomi போன் மீது ரூ.40,000 நேரடி விலை குறைப்பு.. 120W சார்ஜிங்.. மூன்று 50MP கேமரா!

120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி + 50எம்பி + 50எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 12ஜிபி ரேம் போன்ற முரட்டுத்தனமான அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.40,000 தள்ளுபடி கிடைக்கிறது என்று அதை மரண ஆஃபர் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது சியோமி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சியோமி 12 ப்ரோ 5ஜி (Xiaomi 12 Pro 5G) மீது 47% பிளாட் ஆஃபரை (Flat Offer) அறிவித்துள்ளது. அதாவது ரூ.40,000 என்கிற நேரடி தள்ளுபடியை (Initial Discount) அறிவித்துள்ளது.

மரண ஆஃபருங்கோ.. இந்த Xiaomi போன் மீது ரூ.40000 விலை குறைப்பு!

சியோமி 12 ப்ரோ 5ஜி போனின் ஆஃபர் விலை: 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி போனின் அசல் விலை ரூ.84999 ஆகும். ஆனால் தற்போது இது பிளிப்கார்ட் வழியாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளமானது இந்த போனின் மீது 47 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

ஒருவேளை நீங்கள் சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க விரும்பினால் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வங்கி சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூடுதல் சலுகைகள் மூலம், சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை இன்னும் குறைக்க உதவும்.

பிளிப்கார்ட் வலைத்தளமானது சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது "லாபகரமான" எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை வழங்குகிறது. இதன் கீழ் நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.37600 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். அறியாதோர்களுக்கு பிளிப்கார்ட் வழங்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது உங்கள் பழைய போனின் மாடல் மற்றும் தற்போதைய நிலையை பொறுத்து வேறுபடும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஒன்கார்ட் (OneCard) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.750 பிளாட் ஆஃபர் கிடைக்கும். மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான பரிவர்த்தனைக்கு 5 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

சியோமி 12 ப்ரோ 5ஜி மீதான ஆஃபர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனை இப்போதும் நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் சியோமி 12 ப்ரோ 5ஜி-யின் நிறைகள் மற்றும் குறைகள் இதோ:

நிறைகளை பொறுத்தவரை, இது முற்றிலும் சிறப்பான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது கிளாஸ்-லீடிங் சார்ஜிங் ஸ்பீடை வழங்குகிறது. சொல்லவே வேண்டாம் இது மிகவும் திறமையான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

குறைகளை பொறுத்தவரை, சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முறையான ஐபி ரேட்டிங் எதுவும் இல்லை. இந்த போனின் சார்ஜிங் ஸ்பீட் ஆனது மிகவும் வேகமாக இருந்தாலும் கூட இதன் பேட்டரி லைஃப் அவ்வளவு சிறப்பாக இல்லை. கடைசியாக இந்த கேமரா செட்டப்பில் உள்ள அல்ட்ராவைடு கேமராவில் ஆட்டோஃபோகஸ் இல்லை; மேலும் டெலிஃபோட்டோ கேமராவில் 2எக்ஸ் ஜூமிங் மட்டுமே உள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, சியோமி 12 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் வரும் இந்த சியோமி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, சியோமி 12 ப்ரோ 5ஜி-யில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ராவைட் கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 4600mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Pro 5G Phone Gets Rs 40000 Off in Flipkart Check Pros and Cons Before Buying it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X