பக்கவான சிப்செட் இதுதான்: கவனம் ஈர்க்கும் Xiaomi 12 Lite.! எப்போது அறிமுகம் தெரியுமா?

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து சூப்பரான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது ஒப்போ, விவோ நிறுவனங்களின் போன்களை பின்னுக்கு தள்ளும் வகையில் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது சியோமி.

 இந்நிறுவனம் இப்போது அறிமுகம்

ஆனால் இந்நிறுவனம் இப்போது அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் கொஞ்சம் விலை உயர்வாக தான் இருக்கிறது. பட்ஜெட் விலையில்ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தால் பரவாயில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!

 சியோமி 12 லைட்

சியோமி 12 லைட்

அதாவது சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 12 லைட் (Xiaomi 12 Lite) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன்Azerbaijan-இல் முன்பதிவுகளுக்கு தயாராக உள்ளதாகதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

தனித்துவமான டிஸ்பிளே

தனித்துவமான டிஸ்பிளே

சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் சப்போர்ட் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

6.55-இன்ச் என்பதால் கையில் பிடித்து பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

ஸ்னாப்டிராகன சிப்செட்

ஸ்னாப்டிராகன சிப்செட்

இந்த சியோமி 12 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங், எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த
அசத்தலான சியோமி ஸ்மார்ட்போன்.

கேமராவுக்கு தனி கவனம்

கேமராவுக்கு தனி கவனம்

சியோமி நிறுவனம் சிப்செட் மற்றும் டிஸ்பிளேவை விட கேமராக்களில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். அதேபோல் சியோமி 12 லைட் ஸ்மார்ட்போனில் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது புதிய சியோமி ஸ்மார்ட்போன்.

Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!

  பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, புதிய சியோமி 12 லைட் ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி மட்டுமே உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆனால் இந்த பேட்டரிக்கு பதிலாக 5000 எம்ஏஎச் அல்லது 6000 எம்ஏஎச் பேட்டரி இருந்தால்இன்னும் சூப்பராக இருக்கும்.

மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

என்ன விலை?

என்ன விலை?

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளாக், பிங்க, கிரீன் நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் 999 AZN (இந்திய மதிப்பில் ரூ.46,400)-விலையில்அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Lite with Snapdragon 778G chipset to launch soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X