ஒப்போ, விவோ எல்லாம் ஓரமா போங்க!.. Xiaomi 12 Lite 5G அறிமுகம்? அட்டகாசமான அம்சங்கள்.!

|

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்கின்றன. அந்த வரிசையில் சியோமி நிறுவனமும் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

 சியோமி 12 லைட் 5ஜி

சியோமி 12 லைட் 5ஜி

அதாவது சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 12 லைட் 5ஜி (Xiaomi 12 Lite 5G) ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிஉள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் Azerbaijan-இல் அறிமுகமாகும் என்றும், அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

என்ன விலை?

என்ன விலை?

மேலும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போனின் சில தகவல்களை டிப்ஸ்டர் Roland Quandt இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த புதிய சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை EUR 506(இந்திய மதிப்பில் ரூ.41,000) ஆக உள்ளது. பின்பு கருப்பு, சிவப்பு, பச்சை
நிறங்களில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.

Google ஆரம்பித்த Google ஆரம்பித்த "ஸ்டார்ட் அப் ஸ்கூல் இந்தியா": இந்தியர்களுக்கு அடித்த லக், இளைஞர்களே தயாரா?

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அதபோல் சியோமி நிறுவனம் இந்த புதிய போனின் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

பணமோசடி வழக்கில் சோதனை: பிரபல செல்போன் நிறுவன இயக்குனர்கள் செஞ்ச வேலைய பாத்தீங்களா?பணமோசடி வழக்கில் சோதனை: பிரபல செல்போன் நிறுவன இயக்குனர்கள் செஞ்ச வேலைய பாத்தீங்களா?

டிஸ்பிளே பரவாயில்லை

டிஸ்பிளே பரவாயில்லை

இப்போது வரும் போன்கள் அனைத்தும் 6.55-இன்ச் டிஸ்பிளேவை குறிவைத்தே வருகிறது. அதேபோல் இந்த புதிய சியோமி போனும் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற அம்சங்கள் இதனுள் இருப்பதாக தகவல்.

சியோமி நிறுவனம் டிஸ்பிளேவில் இதை விட சிறந்த மாற்றங்களை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். அதேசமயம் டிஸ்பிளேவை விட சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்துகிறது சியோமி.

Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இனி புது டிரெண்டா? விரல் அடக்க டிவைஸில் இவ்ளோ மேட்டரா? ஆனா விலை தான்!Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இனி புது டிரெண்டா? விரல் அடக்க டிவைஸில் இவ்ளோ மேட்டரா? ஆனா விலை தான்!

 சிப்செட் எப்படி?

சிப்செட் எப்படி?

புதிய சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கேமிங் பயனர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அதாவது இந்த புதிய போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிக அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் தரமான கேமராக்களுடன் வெளிவரும்.

தரமான சிப்செட்: நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Vivo Y77 5G அறிமுகம்: என்ன விலை?தரமான சிப்செட்: நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Vivo Y77 5G அறிமுகம்: என்ன விலை?

சியோமி 12 லைட் 5ஜி கேமரா

சியோமி 12 லைட் 5ஜி கேமரா

சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதிலும் இந்த போன் 108எம்பி மெயின் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட இதுபோன்ற போன் கேமராக்கள் பயன்படுத்த அருமையாக இருக்கிறது. குறிப்பாக அனைத்து இடங்களிலும் துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது ஸ்மார்ட்போன் கேமராக்கள்.

இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!

 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இந்த சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா.. வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா.. வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!

67W பாஸ்ட் சார்ஜிங்

ஆனாலும் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் Dolby Atmos ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது புதிய சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்.

வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!

 வேற லெவல் கனெக்டிவிட்டி

வேற லெவல் கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், வைஃபை 6, என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 12 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi 12 Lite 5G with 108MP main camera to launch soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X