கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் செய்யலாம்: இந்தியாவின் முதல் ஹைப்பர்சார்ஜ் சாதனம்- சியோமி 11ஐ விலை தெரியுமா?

|

சியோமி அதன் மேம்பட்ட 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியாவில் சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சாதனத்தின் விலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் முழு விவரங்களை பார்க்கலாம்.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்

சியோமி அதன் மேம்பட்ட 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவை சியோமி இந்திய இணையதளத்தின் மூலம் எடுக்கப்பட்டது. ஜனவரி 6 அறிமுகத்துக்கு முன்னதாக சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் இந்தியா விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் விலை

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் விலை

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் விலை வெளியிடப்பட்ட தகவல் குறித்த சமீபத்திய அறிக்கை இந்தியா டுடே டெக் நிறுவனத்திடம் இருந்து வந்தவை ஆகும். இது இந்தியாவில் சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் விலை குறித்த உள்தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டியை மேற்கோள் காட்டி, ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 மற்றும் ரூ.30,000 என்ற பிரிவில் இருக்கும் என கூறப்பட்டது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் பிற போன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் அம்சங்கள்

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் அம்சங்கள்

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் போன்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் உடன் கூடிய அதிவேக சார்ஜிங் திறன் உடன் வருகிறது. ஸ்மார்ட்போன் வெறும் 15 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என சியோமி தெரிவிக்கிறது. வதந்திகளின்படி, புதிய சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த அறிக்கைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வரவிருக்கும் சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜில் இதேபோன்ற 6.67 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வரும் என எதிர்பார்க்கலாம். பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் ஆதரிக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 6 அறிமுகத்துக்கு முன்னதாக சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் இந்தியா விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

டைமன்சிட்டி 920 செயலி

டைமன்சிட்டி 920 செயலி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் வசதியோடு டைமன்சிட்டி 920 செயலி உடன் வரும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் புதிய சியோமி போனின் ஒரே மாறுபாடு இதுவாக இருக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி ஹூட்டின் கீழ் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்

108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் உடன் மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிற சென்சார்களில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது சியோமி 16 மெகாபிக்சல் முன்புற செல்ஃபி கேமரா வசதியோடு வருகிறது.

ரூ.30,000 விலை பிரிவு

ரூ.30,000 விலை பிரிவு

108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் வசதியோடு, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 16 மெகாபிக்சல் முன்புற செல்ஃபி கேமராவுடன் வருகிறது. வரவிருக்கும் சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஜனவரி 6 அன்று அறிமுகமாகும் எனவும் இந்தியாவில் 2022 இல் பிராண்டின் முதல் தொலைபேசியாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 பிரிவில் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 11i HyperCharge Price in India: Super Fast Charging Capability Phone Price, Specs Leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X