சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!
சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாடலை இப்போது ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள்பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 6என்எம் எட்டு-கோர் மீடியாடெக் 920 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்டஅனைத்து வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, Dolby Atmos-க்கான ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications