Home
Mobile

ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் வசதியுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சீனாவில் சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் வசதியுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்அறிமுகம்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி 11 Youth Vitality Edition விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ.23,800) ஆக உள்ளது. மேலும் கருப்பு, நீலம், பிங்க், வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வரும் டிசம்பர் 10-ம் தேதி இந்த சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் வசதியுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்அறிமுகம்

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சியோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 33Wh பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் வசதியுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்அறிமுகம்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன். ப்ராக்ஸிமிட்டி சென்சார்,கைரோஸ்கோப் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன்
மாடல்.

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனுக்கு MIUI 12.5 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சியோமி 11 லைட் 5ஜி என்இ கிடைக்கத் துவங்கியுள்ள இந்த அப்டேட் ஆனது விரைவான செயல்திறனை வழங்குகிறது மற்றும் பல முக்கியமான மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த புதிய அப்டேட்
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 11 Youth Vitality Edition With Triple Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X