திடீரெனெ தீப்பிடித்து வெடித்த Xiaomi Phone! மெத்தை மேல் இருந்த போன் எப்படி தீப்பிடித்தது?
ஸ்மார்ட்ஃபோன்கள் தீப்பிடிப்பது, திடீரென வெடிப்பது என்பது போன்ற ஆபத்தான பிரச்சினைகள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இத்தகைய சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் Xiaomi, OnePlus மற்றும் பிற பிராண்டுகளின் சாதனங்கள் வெடித்த பல நிகழ்வுகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இப்போது, சமீபத்திய சம்பவத்தில், ஒரு Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட் போன் சாதனம் திடீரென வெடித்து, புகையை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பீகார் மாநிலம், பாகல்பூரில் உள்ள மொஹதிநகரில் வசிக்கும் சஞ்சீவ் ராஜா என்பவர் போனில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தீப்பிடித்து வெடித்த சியோமி சாதனம்!
இந்த சாதனம் சார்ஜருடன் இணைக்கப்படாமல் இருந்த போதே திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் நமக்கு தெரியவில்லை, ஆனால் அதிர்ஷ்டவசமாக, சாதனத்தின் உரிமையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து விலகி இருந்த நேரத்தில் சாதனம் வெடிப்படைந்ததால், யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.
படுக்கையில் சாதனம் வைக்கப்பட்ட நேரத்தில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது எந்தவொரு உடல் காயங்களையும் ஏற்படுத்தவில்லை. அதிர்ஷ்டவசமாக யாரும் அருகில் இல்லை. இல்லையென்றால், இது போன்ற விபத்துகள் மிகவும் ஆபத்தான மற்றும் கடுமையான தீ காயங்களை ஏற்படுத்தும் விளைவுகளை கொண்டது என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பரில் வாங்கப்பட்ட Xiaomi 11 Lite NE 5G சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் சார்ஜருடன் இணைக்கப்படாமல் இருந்த நேரத்தில் திடீரென புகையை வெளியிடத் தொடங்கியதாக சஞ்சீவ் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். அவர் வீட்டில் தேநீர் தயாரித்து விட்டுச் சென்றபோது அவரது படுக்கையில் தொலைபேசி செயலற்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் திரும்பி வந்தபோது, அவரது ஸ்மார்ட்போன் புகை வெளியேற்றியுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் போனின் பேட்டரி பகுதிக்கு அருகில் சேதம் ஏற்பட்டிருப்பதை தெளிவாக காண்பிக்கிறது. பின்புற பேனலின் நடுப்பகுதி முற்றிலும் எரிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெடிப்பின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், மெத்தையின் (தொலைபேசி வைக்கப்பட்டிருந்த இடத்தில்) குறைந்தது 2-3 அடுக்குகள் எரிந்ததாக கூறப்படுகிறது.

மெத்தை மேல் இருந்த போன் சியோமி ஸ்மார்ட்போன்!
போனின் பின்பக்க மொபைல் கேஸ் உருகி, தீப்பிடித்ததால் மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த பெட்ஷீட்டில் ஒட்டப்பட்டிருந்ததையும் புகைப்படம் காண்பிக்கிறது. இந்த விஷயம் குறித்து Xiaomi நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனம் இன்னும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. வெப்பமான நேரங்களில் போன் சூடாவது இயல்பானது. கோடை காலம் வந்துவிட்டால் மக்கள் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது முக்கியமானது.
உங்கள் போன் திடீரெனெ சூடாக்கினால், அவற்றை உடனே குளிர்விக்க வேண்டும். இதற்கு முதலில் உங்கள் போனின் மேல் இருக்கும் மொபைல் கேஸை நீக்க வேண்டும். பின் உங்கள் போனை சிறிது நேரம் OFF செய்து, நிழலான இடத்தில் சிறிது நேரம் குளிரடைய விட வேண்டும். உங்கள் சாதனத்தை பிரிட்ஜில் வைப்பது, AC அருகே காண்பிப்பது போன்ற செயல்களை தவிர்க்கவும்.


Click it and Unblock the Notifications








