செப்டம்பர் 15: சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில்
கசிந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான வீடியோக்கள்மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த புதிய சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். அதாவது 5ஜி சேவை கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications