Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 11 லைட 5ஜி என்இ.! விலை மற்றும் விபரங்கள்.!

சமீபத்தில் சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் சியோமி 11 லைட 5ஜி என்இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலைப் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 11 லைட 5ஜி என்இ.! விலை?

வெளிவந்த தகவலின் அடிப்படையில், சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் செப்டம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ரூ.21,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜி ரேம் கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அதிநவீன அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த மென்பொருள் வசதி, தரமான கேமரா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 11 லைட 5ஜி என்இ.! விலை?

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

பப்பில்கம் ப்ளூ, பீச் பிங்க், ஸ்னோஃப்ளேக் ஒயிட் மற்றும் ட்ரஃபிள் பிளாக் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர்
மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 11 லைட 5ஜி என்இ.! விலை?

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் உடன் சியோமி 11டி, சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்த சாதனங்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi 11 Lite 5G NE to be launched in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X