சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனுக்கு MIUI 12.5 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சியோமி 11 லைட் 5ஜி என்இ கிடைக்கத் துவங்கியுள்ள
இந்த அப்டேட் ஆனது விரைவான செயல்திறனை வழங்குகிறது மற்றும் பல முக்கியமான மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக இந்த புதிய அப்டேட் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இப்போது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிக்குமிகவும் அருமையாக செயல்படும்.
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பப்பில்கம் ப்ளூ, பீச் பிங்க், ஸ்னோஃப்ளேக் ஒயிட் மற்றும் ட்ரஃபிள் பிளாக் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். அதேபோல் இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கத் துவங்கியுள்ள புதிய அப்டேட் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications