Home
Mobile

ரூ.2,500ல் அதிக வசதிகளுடன் புதிய எக்ஸேஜ் மொபைல்!

By Super
ரூ.2,500ல் அதிக வசதிகளுடன் புதிய எக்ஸேஜ் மொபைல்!

அவசர உலகில் வேலைகளை சுலபமாக முடிக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸேஜ் நிறுவனத்தின் மூலம் சில சிறந்த தொழில் நுட்பங்களை பெறலாம். ஏனெனில் இந்நிறுவனம் எம்-522 என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.

இந்த மொபைலில் குறிப்பாக சொல்லப்போனால் இதில் மல்டி லேங்குவேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மிக ஸ்டைலாக வடிவமைக்கபட்டு இருக்கும் எம்-522 மொபைலில் 2.4 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சந்தோஷமான விஷயமும் உள்ளது. மியூசிக், கேம்ஸ் போன்ற வசதிகளுக்கு இதில் பிரத்தியேகமான பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் எக்ஸ்பேன்டபில் மெமரியையும் விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினை கொடுக்கும் எம்-522 மொபைல் எம்பி-3 ஆடியோ ப்ளேயர் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. கேமராவை பொறுத்த வரை எதிர் பார்ப்பது துல்லியத்தை தான். அந்த துல்லியம் இந்த மொபைலின் 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் பெற முடியும். எளிதாக வீடியோ ரெக்கார்டிங்கும் செய்து வைத்து, ஆசைப்படும் தருணங்களில் எடுத்து பார்த்து ரசிக்கலாம்.

மியூசிக் கேட்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் பிரத்தியேக பட்டன்களை கொண்ட இந்த மொபைலில் 250 கேம்கள் உள்ளன. இதில் 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியை விரிவுபடுத்தி கொள்ளலாம். இப்படி தகவல்களை சேகரித்து கொள்ளும் வசதிக்கு மைக்ரோஎஸ்டி பெரிதும் துணை புரிகிறது. எக்ஸேஜ் எம்-522 மொபைலில் உள்ள டபிள்யூஏபி/ ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பங்களும் உள்ளது. இதனால் எளிதாக சோஷியல் நெட்வொர்க், ஃபேஸ்புக், பிரவுசிங் போன்ற வசதிகளை நினைக்கும் நேரத்தில் பயன்படுத்தலாம்.

மல்டி மீடியா இன்டகிரேட்டடு கேமரா கொண்ட இந்த எக்ஸேஜ் எம்-522 மொபைல் ரூ.2,500ஐ ஒட்டிய கவர்ச்சிகரமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X