Home
Mobile

அசத்தும் வடிவமைப்பில் புதிய டியூவல் சிம் மொபைல்: எக்ஸேஜ் அறிமுகம்

By Super
அசத்தும் வடிவமைப்பில் புதிய டியூவல் சிம் மொபைல்: எக்ஸேஜ் அறிமுகம்
எம்-234 என்ற மொபைலை இன்று வெளியிட்டிருக்கிறது எக்ஸேஜ் நிறுவனம். இந்த மொபைல் வாடிக்கையாளர்களை தனது வடிவமைப்பிலேயே வெகுவாக அசத்துகிறது. இது பார்த்த நொடிப்பொழுதிலேயே மனதை திருடி விடுகிறது.

எம்-234 மொபைல் வெறும் 59 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. கைக்கு கச்சிதமாக இருக்கும் வைகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். மிகக் குறைந்த விலையில் வலம் வரும் ஸ்டையான மொபைல் இது என்று தாராளமாகக் கூறலாம்.

இதில் 2.4 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா வசதிக்கும், ஃபேஸ்புக் வசதிக்கும் பிரத்தியேகமாக பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா கண்களைக் கவரும் வகையில் புகைப்படங்களையும், வீடியோ வசதியினையும் கொடுக்கிறது.

128 எம்பி இன்டர்னல் மெமரி சப்போர்ட் கொண்டது. 8ஜிபி வரை மெமரி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியும் உள்ளது. இந்த மொபைலில் 10 விதமான ஃபங்ஷன் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு மொபைல் டிராக்கர் வசதியும் உள்ளது.

இதில் எல்ஐ-அயான் பேட்டரி உள்ளதால் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 288 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. இந்த எக்ஸேஜ் எம்-234 என்ற மொபைல் ரூ.4,000 விலையையும் விடக் குறைவாகக் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X