Home
Mobile

ஸ்டைலான வடிவமைப்பில் புதிய எக்ஸேஜ் மொபைல்!

By Super
ஸ்டைலான வடிவமைப்பில் புதிய எக்ஸேஜ் மொபைல்!

புதிய தொழில்நுட்பங்களுடன் மொபைல்களை உருவாக்குவதில் மொபைல் நிறுவனங்களுக்கு இடையில் போட்டா போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள். பயன்படுத்தும் ஆர்வத்தை தூண்டும் வகையில் மொபைல்கள் இந்திய சந்தையில் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது.

இதேபோன்று, புதிய தொழில்நுட்பங்களுடன் எம்-144 என்ற புதிய மொபைல் மாடலை எக்ஸேஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலின் வடிவமைப்பே சற்று வித்தியாசத்தை காட்டுகிறது. அப்படியென்றால் நிச்சயம் பயன்படுத்தும் விதத்திலும் சில வித்தியாசத்தை, வாடிக்கையாளர்களை உணர செய்யும்.

இந்த எம்-144 மொபைல் ப்ளாக் மற்றும் ரெட் ஒயின் என்ற இரண்டு அற்புதமான நிறங்களில் கிடைக்கும். இது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் கவரும் வகையில் டியூவல் சிம் கார்டு தொழில் நுட்ப வசதியினை பெற்றது.

இந்த மொபைல் 2.0 இஞ்ச் திரை வசதியினையும், டிஎப்டி கலர் திரையினையும் கொண்டது. இதில் உள்ள 3.2 மெகா பிக்ஸல் துல்லியத்தை கேட்டால் நிச்சயம் ஒரு திருப்தியை கொடுக்கும். இது 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தை தரும். இதன் 1,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 288 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் கொடுக்கும்.

இதனால் தொடர்பு கொள்ளும் போது பேட்டரி பற்றாக்குறையால் துண்டிக்கப்படுமே என்ற கவலையில்லாமல் பேசலாம். இதன் இன்டர்னல் மெமரி 128 எம்பி வரை உள்ளது. எம்-144 மொபைலில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினை பெறலாம். எப்எம் ரேடியோ மூலம் நாள் முழுவதும் கூட பாடல்களை கேட்டு மகிழலாம்.

புளூடூத் வசதி கொண்ட இந்த மொபைலில், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பமும் உள்ளது. அதோடு இன்னும் ஒரு பெரிய வசதி என்னவென்றால், இந்த மொபைல் பன்மொழி (மல்டி லேங்க்வேஜ்) வசதியுடன் வெளி வரும். ஸ்டைலாக இருக்கும் எம்-144, கையில் வைத்திருப்பவர்களுக்களையும் ஸ்டைலாக மாற்றும் என்பது திண்ணம்.

டியூவல் சிம் வசதி கொண்ட இந்த எக்ஸேஜ் எம்-144 டியூவல் சிம் மொபைல் ரூ.2,999 விலையில் கிடைக்கும். இந்த மொபைல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X