Home
Mobile

குறைந்த விலையில் வசீகரிக்கும் புதிய எக்சேஜ் மொபைல்!

By Super
குறைந்த விலையில் வசீகரிக்கும் புதிய எக்சேஜ் மொபைல்!

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட குறைந்த விலை மொபைல்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது எக்சேஜ் நிறுவனம். எம்-738 ஸ்பீடு என்ற பெயர் கொண்ட இந்த மொபைலை குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது எக்சேஜ் நிறுவனம்.

2.8 இஞ்ச் திரையினை கொண்டுள்ளது இந்த மொபைல். குறைந்த விலை கொண்ட இந்த எம்-738 ஸ்பீடு மொபைல் தொடுதிரை வசதியினை கொண்டது. ஆனால் இந்த மொபைலின் வடிவமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறலாம்.

நிச்சயம் இந்த மொபைலின் தோற்றம் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை அதிகப்படுத்தும். அவ்வளவு நுட்பமாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எப்எம் ரேடியோ, எம்பி-3 ப்ளேயர், வாய்ஸ் ரெக்கார்டிங் போன்றவற்றை மிக எளிதாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும்.

எம்-738 ஸ்பீடு மொபைல் பற்றி சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மொபைல் 6 மணி நேரம் டாக் டைம் வசதியினை வழங்கும் என்பது தான். கம்மி விலையில் 6 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும் இது போன்ற மொபைல்களை பெறுவது அரிய விஷயம்.

அழகான வடிவமைப்பை கொண்ட இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினை கொடுக்கும். அது மட்டும் அல்லாது முகப்பு கேமராவினையும் இந்த மொபைல் வழங்கும். 128 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைலில், இதன் மெமரி வசதியினை 8 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

மேலும் இதில் புளூடூத், ஜிபிஆர்எஸ், யூஎஸ்பி போன்ற சகல தொழில் நுட்ப வசதிகளையும் எளிதாக பெற முடியும். வைட் மற்றும் ப்ளூ, ப்ளாக் மற்றும் ரெட், ப்ளாக் மற்றும் ஆரஞ்சு போன்ற கலக்கலான நிறங்களில் இந்த மொபைல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சிகரமான தோற்றம் மட்டும் அல்லாமல், எம்-738 மொபைல் கவர்ச்சிகரமான விலையையும் கொண்டது. இந்த எம்-738 ஸ்பீடு மொபைலை ரூ.2,999 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X