Home
Mobile

எக்ஸலன்ட் என்று சொல்ல வைக்கும் எக்ஸேஜ் எம்-486 ஸ்மார்ட்போன்!

எக்ஸலன்ட் என்று சொல்ல வைக்கும் எக்ஸேஜ் எம்-486 ஸ்மார்ட்போன்!

இந்திய மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யதுள்ளது எக்ஸேஜ் நிறுவனம்.எம்-486 ஜியன்ட் என்ற அந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோரை எளிதாக தன் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் டியூவல் சிம் தொழில் நுட்பம் உள்ளது.

இது 4 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கேமரா சவுகரியத்தினை கொடுக்கும். 3.2 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனிய தருணங்களை நெஞ்சில் நிறுத்தும் வகையில் அழகிய புகைப்படங்களை பெற முடியும்.

இந்த கேமராவில் உள்ள டிஜிட்டல் சூம் தொழில் நுட்பத்தின் மூலம் எந்த புகைப்படத்தினையும் தொளிவாக பார்க்க முடியும். தகவல்களை பதிவு செய்து கொள்ள இந்த ஸ்மார்ட்போன் 256 எம்பி இன்டர்னல் மெமரியையும், 8ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

இந்த ஸ்மார்ட்போனின் மெமரி கார்டில் 40 திரைப்படங்கள், 25 பாடல்கள், 20 ரிங்டோன்கள் மற்றும் 10 வால்பேப்பர்கள் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பிரவுசிங் தொழில் நுட்பத்தினை பெற இந்த ஸ்மார்ட்போன் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினை கொண்டுள்ளது. எத்தகைய உயர்ந்த தொழில் நுட்பத்திற்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும் வகையில் 1,350 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 360 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

அனைத்து வயதினரும் விரும்பும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியா வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் வெகு துரிதமாக சப்போர்ட் செய்யும். இந்த எம்-486 ஜியன்ட் ஸ்மார்ட்போன் ரூ.8,000 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X