Home
Mobile

ஒரே நேரத்தில் 6 புதிய மொபைல்களை அறிமுகம் செய்த வின்காம்!

By Super
ஒரே நேரத்தில் 6 புதிய மொபைல்களை அறிமுகம் செய்த வின்காம்!

டபிள்யூ வரிசையில் 6 புதிய மொபைல்களை அதிரடியாக வெளியிட்டு மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது வின்காம் நிறுவனம். இந்த 6 மொபைல்களும் என்ட்ரி லெவல் மொபைல்போன் ரகத்தில் வந்துள்ளன.

டபிள்யூ-401, டபிள்யூ-403, டபிள்யூ-257, டபிள்யூ-259, டபிள்யூ-352 மற்றும் டபிள்யூ-355 என்ற பெயர் கொண்ட இந்த 6 புதிய மொபைல்களில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வின்காம்-401, மற்றும் வின்காம்-403 மொபைல்களில் லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 35 மணி நேரம் டாக் டைம் மற்றும் 55 நாட்கள் ஸ்டான்-பை டைமும் கொடுக்கும். வின்காம் 401 மொபைல் 2ஜி நெட்வொர்க் வசதி கொண்டது.

இதில் ஜிபிஆர்எஸ், டபிள்யூஏபி, புளூடுத் போன்ற தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மெமரி வசதி நிறைய தகவல்களை சேகரிக்க உதவும். இதன் மெமரி வசதியினை 4ஜிபி வரை அதிகபடுத்தி கொள்ளலாம்.

வின்காம்-403 மொபைலை பற்றி கூற வேண்டும் என்றால், இது 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட மொபைலாகும். இதன் மூலம் கண்கவரும் வண்ண புகைப்படங்களையும், வீடியோவினையும் எடுக்கலாம்.

என்ட்ரி லெவல் மொபைல்போனில் இந்த அளவு சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கி இருப்பது என்பது வரவேற்கூடிய விஷயம் தான். இந்த மொபைலில் விஜிஏ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ-403 மொபைல் 2.6 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. டபிள்யூ-401 மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலாகும். 403 மொபைலை ஒப்பிட்டு பார்க்கையில் டபிள்யூ-401 மொபைலின் திரை வசதி சற்று சிறிதாக இருக்கும். ஆனாலும் எந்த காட்சியையும், தகவல்களையும் முழுமையாக பார்க்க உதவும்.

இந்த 403 மொபைலில் நிறைய பயன்பாடுகளை தரும் தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டபிள்யூ-403 மொபைலின் விலை ரூ.2,599 இருக்கும். டபிள்யூ-401 மொபைல் ரூ.2,399 விலையில் கிடைக்கும்.

டபிள்யூ-257 மொபைல் 2 இஞ்ச் திரை கொண்ட மொபைல். இதில் மொபைல் தெப்ட் டிராக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மொபைலை தவறவிட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ கவலைபட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மொபைல் டிராக்கர் தொழில் நுட்பத்தின் மூலம், தொலைந்து போனால் கூட மொபைலை எளிதாக கண்டுபிடிக்க உதவும்.

இதில் 1,500 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் 22 நாட்கள்

ஸ்டான்-பை டைமையும் கொடுக்க முடியும். இந்த டபிள்யூ-257 மொபைல் ரூ.1,890 விலையிலும், டபிள்யூ-259 மொபைல் ரூ.1,949 விலையிலும் கிடைக்கும்.

இது மட்டுமல்லாது, இன்னும் இரண்டு மொபைல்கள் இருக்கிறது. டபிள்யூ-352, டபிள்யூ-355 என்ற பெயர் கொண்ட மொபைல்களாகும். இந்த மொபைலில் உள்ள பேட்டரி வசதி மேல் கூறப்பட்டுள்ள மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரி வசதிகளையும் விட சற்று வித்தியாசமானது.

டபிள்யூ-352 மொபைல் ரூ.2145 விலையிலும், டபிள்யூ-355 மொபைல் ரூ.2075 விலையிலும் கிடைக்கும். இந்த ஆறு மொபைல்களுமே குறைந்த விலை கொண்ட மொபைல் போன்களாக வந்து மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X