மொத்த போன்களையும் முடிச்சிவிட்ட Motorola.. பவர்ஃபுல் AI Flip போன்.. அடேங்கப்பா விலையில் அல்டிமேட் அம்சங்கள்!
மோட்டோரோலா நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் ஆனது இப்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் நேரலையில் உள்ளது.
கடந்த ஏப்ரல் 2025 இல் நடந்த, மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டிற்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்தியாவில் என்ன மாதிரியான பட்ஜெட்டின் கீழ் இது அறிமுகமாகும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை.

மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ராவின் அதிகாரப்பூர்வ டீஸர்கள், இது "ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டால் இயக்கப்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ ஃபிளிப் போன்" என்று குறிப்பிடுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ரீன், ரெட் மற்றும் பெய்ஜ் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதையும் டீஸர்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது வரையிலாக, ரேசர் 60 அல்ட்ரா வேரியண்ட் உடன் சேர்த்து ரேசர் 60 வேரியண்ட் அறிமுகமாகுமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9 இன்ச் 1.5கே pOLED LTPO இன்னர் டிஸ்பிளே
- 4 இன்ச் செக்கண்டரி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹலோ UX
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ்
- டூயல் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
- முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் கேமரா
- 68W வயர்டு சார்ஜிங்
- 4,700mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி48 ரேட்டிங்
இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ரேசர் 60 அல்ட்ராவின் அதிகாரப்பூர்வ விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் ரூ.99,999 ஆக இருந்தது. எனவே, ரேசர் 60 அல்ட்ராவின் இந்திய விலையும் கிட்டத்தட்ட இதேபோன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.


Click it and Unblock the Notifications








