Home
Mobile

விரிச்சா 10.2-இன்ச்.. அப்புறம் 7.9-இன்ச்.. மடக்குனா 6.4-இன்ச்.. Huawei Mate XT Ultimate Design அறிமுகம்!

Huawei Mate XT Ultimate Design: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரிஸை (iPhone 16 Series) வெளியிட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, ஹூவாய் நிறுவனமானது உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் (World's first tri-fold smartphone) ஆன ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைனை அறிமுகம் செய்துள்ளது. முழுவதுமாக விரிக்கப்படும் போது ஒரு பெரிய 10.2-இன்ச் டிஸ்பிளேவாக மாறும் இந்த் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஹார்மனிஓஎஸ் 4.2 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது மொத்தம் 3 டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. முழுமையாக விரித்தால் இது 10.2-இன்ச் (3184 x 2232 பிக்சல்கள்) பிலெக்ஸிபிள் LTPO OLED டிஸ்பிலேவாக இருக்கும்.

Huawei Mate XT Ultimate Design அறிமுகம்.. என்ன விலை?

அதை ஒருமுறை மடித்தால் 7.9-இன்ச் (2048 x 2232 பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். இரண்டாவது முறை மடித்தால் இது 6.4-இன்ச் திரை (10328 x 22308 x 2232, பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போன் ஆனது எந்த சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது என்கிற விவரங்களை ஹூவாய் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256GB, 512GB மற்றும் 1TB என மொத்தம் 3 வகைகளில் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS - optical image stabilization) கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (Ultra-wide camera) மற்றும் 12-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் (Periscope Telephoto camera) கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Huawei Mate XT Ultimate Design அறிமுகம்.. என்ன விலை?

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Fingerprint Scanner) உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 66W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, அளவீடுகளில் இது சிங்கிள் ஸ்க்ரீனின் போது 156.7x73x12.8மிமீ, டபுள் ஸ்க்ரீனின் போது 156.7x143x7.45மிமீ மற்றும் ட்ரிபிள் ஸ்க்ரீனின் போது 156.7x219x3.6மிமீ உள்ளது. எடையை பொறுத்தவரை 298 கிராம் உள்ளது.

Huawei Mate XT Ultimate Design அறிமுகம்.. என்ன விலை?

ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது CNY 19,999 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,35,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விலை முறையே CNY 21,999 (தோராயமாக ரூ.2,59,500) மற்றும் CNY 23,999 (தோராயமாக ரூ.2,83,100) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் டார்க் பிளாக் மற்றும் ரூய் ரெட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஏற்கனவே ஹூவாய் விமால் (Huawei Vmall) வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இது இந்திய சந்தைக்கு வருமா அல்லது வராதா, வரும் பட்சத்தில் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? போன்ற எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
Worlds First Tri Fold Smartphone Huawei Mate XT Ultimate Design Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X