இது போனே இல்லை.. பவர்ஹவுஸ்.. உலகின் முதல் ஹை-குவாலிட்டி தெர்மல் இமேஜிங் கேமரா Mobile.. விலை என்ன?
ரக்டு ஸ்மார்ட்போன் மாடலில் இதுவரை கிடைக்காத ஒரு புதிய அம்சம் இப்போது பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி (Blackview BL9000 Pro 5G) மொபைல் போன் வழியாக நமக்கு கிடைத்துள்ளது. உலகின் முதல் ஹை-ரெசொலூஷன் தெர்மல் இமேஜிங் கேமராவை இச்சாதனம் கொண்டுள்ளது.
என்னது? உலகத்தின் முதல் தெர்மல் இமேஜிங் கேமரா (World's first thermal imaging camera) போனா? என்று வியபடிப்படையும் மக்களுக்கு, இந்த போன் அதிகப்படியான வியப்பை வழங்கும், இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை பேக் செய்துள்ளது. இந்த புதிய பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி (Blackview BL9000 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று இப்பொது பார்க்கலாம். இதன் விலை விபரத்தையும் விற்பனை விபரத்தையும் சேர்த்து பார்க்கலாம்.

பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி (Blackview BL9000 Pro 5G):
இந்த புதிய பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 12GB ரேம் + 24GB ரேம் எக்ஸ்பென்ஸன் அம்சத்துடன் வருகிறது. ஆகையால், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மொத்தமாக 36GB ரேம் அம்சத்தை பெறுகிறது. 36ஜிபி ரேம் என்பது உண்மையில் மிகவு சிறப்பான அம்சமாகும். இது 512GB பிளாஷ் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இந்த சாதனம் வருகிறது.
இந்த புதிய பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்லிர் லெப்டான் 3.5 தெர்மல் இமேஜிங் கேமரா (FLIR Lepton 3.5 Thermal lmaging Camera) அம்சத்துடன் வருகிறது. இந்த அம்சத்துடன் இந்த போன் உலகின் அதிசக்தி வாய்ந்த தெர்மல் இமேஜ் கேமராவாக வருகிறது. இது விவிட் ஐஆர் (vividIR) அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக அமைகிறது.
இந்த பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி (Blackview BL9000 Pro 5G) சாதனம் 6.78' இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது மிகவும் உறுதியான ரஃக்டு பாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8800mAh பேட்டரி மற்றும் 120W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது. இது 3 முதல் 4 நாள் வரை நீடிக்கும்.

பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி மொபைல் விலை என்ன? (Blackview BL9000 Pro 5G Mobile Price):
இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த பிளாக்வியூ பிஎல்9000 ப்ரோ 5ஜி (Blackview BL9000 Pro 5G) டிவைஸ் 50MP OIS ஆன்டி-ஷேக் ரியர் கேமரா அம்சத்துடன், முன்பக்கத்தில் 50MP செல்பி கேமராவை வழங்குகிறது. இதன் தெர்மல் இமேஜிங் கேமரா -10 டிகிரி செல்ஸியஸ் முதல் 400 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை கைப்பற்றும் திறனை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இல் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் பேண்ட் வைஃபை 6 (WiFi 6), டூயல் ஹர்மான் கார்டன் ஸ்மார்ட் பிஏ ஸ்பீக்கர்ஸ் (Dual Harman Kardon Smart-PA Speakers), கார்னிங் கொரிலா கிளாஸ் 7 விக்டஸ் (Corning Gorilla® Glass 7 Victus) பாதுகாப்புடன் வருகிறது.
இது நவீன மற்றும் பாதுகாப்பான பயனர் அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ.63,389 என்ற அசல் விலையில் வருகிறது. ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ.45,873 விலையில் வருகிறது.


Click it and Unblock the Notifications








