Home
Mobile

ஒரு கிராமுக்கு 4200mAh.. உலகின் முதல் 10000mAh பேட்டரி போன்.. எந்த கம்பெனி? எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள ஒரு புதிய லீக், 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (10000mAh battery Mid-range Smartphone) ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் சோதிக்கப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருந்தால், 5 இலக்க பேட்டரித்திறனை ஒரு ஸ்மார்ட்போன் எட்டுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

எந்த மாடல்? குறிப்பிட்ட டிப்ஸ்டர் இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் என்பதை குறிப்பிடப்படவில்லை. இதுவரையிலாக 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு கான்செப்ட் ஸ்மார்ட்போனை (10,000mAh battery concept phone) காட்சிப்படுத்திய ஒரே நிறுவனம் ரியல்மி (Realme) தான் என்பதால், இது ரியல்மி நிறுவனத்தின் மாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

உலகின் முதல் 10000mAh பேட்டரி போன்.. எந்த கம்பெனி? எப்போது ரிலீஸ்?

ஒரு ஸ்மார்ட்போனில் 10000எம்ஏஎச் எப்படி சாத்தியமாகும்? இது சிலிக்கான்-கார்பன் பேட்டரியால் (Silicon-carbon battery) சாத்தியமாகும். இத்தகைய பெரிய திறன் கொண்ட பேட்டரிகளின் எழுச்சி ஆனது - ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சிலிக்கான் கார்பன் நெகடிவ் எலக்ட்ரோடு பேட்டரி தொழில்நுட்பத்திற்கு (Silicon-carbon negative electrode battery technology) மாறுவதுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு சுமார் 372mAh அதிகபட்சமாக இருக்கும் பாரம்பரிய கிராஃபைட் பேட்டரிகளுடன் (Graphite batteries) ஒப்பிடும்போது, சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் கோட்பாட்டளவில் ஒரு கிராமுக்கு 4,200mAh வரை (MyDrivers வழியாக கிடைத்த தகவலின்படி) வழங்க முடியும். இந்த அளவிலான அதிக திறன் ஆனது உற்பத்தியாளர்கள் பேட்டரி யூனிட்டின் அளவை கடுமையாக அதிகரிக்காமல் பேட்டரி லைஃப்பை கணிசமாக அதிகரிக்க அனுமதிக்கிறது.

ரியல்மி நிறுவனம் அதன் 10000எம்ஏஎச் பேட்டரி கான்செப்ட் ஸ்மார்ட்போனின் பேட்டரியில் 10 சதவீத சிலிக்கான் விகிதத்தை பயன்படுத்துவதாகவும், அது 887Wh/L ஆற்றல் அடர்த்தியை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இது தொழில்துறையில் மிக உயர்ந்த ஒன்றாகும். இது பெரிய பேட்டரிகளுக்கு பருமனான வடிவமைப்புகள் தேவையில்லாத எதிர்காலத்தை கற்பனை செய்வதை எளிதாக்குகிறது.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு (Official Launch Date) குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை, ஆனால் அடிக்கடி புதிய லீக்ஸ் வெளிவருவதால், 10000எம்ஏஎச் பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இதைவிட இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனின் 8.5 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போதுசந்தையில் வாங்க கிடைக்கும் பல நிலையான ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும்.

இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனாவில், ஸ்லிம் ஆன வடிவமைப்புடன் வாங்க கிடைக்கின்றன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். உதாரணமாக, ஹானர் பவர் (Honor Power) ஸ்மார்ட்போன் ஆனது 8மிமீ சேஸில் 8000எம்ஏஎச் பேட்டரியை (8000mAh cell in 8mm chassis) பேக் செய்கிறது

ரியல்மி நிறுவனமோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரோ இத்தகைய ஸ்மார்ட்போன்களை மொபைல் சந்தைக்கு கொண்டுவந்தால், அது சகிப்புத்தன்மை மற்றும் மெலிதான வடிவமைப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அதி-உயர்-திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் (Ultra-high-capacity phones) எழுச்சிக்கான பிள்ளையார் சுளையாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியல்மி தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை ஜூலை 24 ஆம் தேதி அன்று ரியல்மி நிறுவனம் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அவைகள் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) மாடல்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Worlds first 10000mAh Smartphone May Launch in First half of 2026 Could be Realme Branded Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X