Home
Mobile

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

By Karthikeyan
உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

சீனாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான சியோமி ஒரு புதிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் களமிறக்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மி-டூ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் எம்ஐயுஐ இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு போன்களான எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி, எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் III போன்றவற்றின் செய்திறனை வீழ்த்திவிடும் என்று சியோமி கூறுகிறது.

ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.3 ஐபிஎஸ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். இதன் 8எம்பி பின்பக்க கேமரா 1080பி வீடியோ பதிவை மிக அருமையாக செய்து முடிக்கும். அதுபோல் இதன் 2எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பரான வீடியோ உரையாடலை நடத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்தி வாய்ந்த 1.5 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எபிகியு80064 எஸ் ப்ரோ சிப்செட் (க்வாட்கோர் க்ரைட் சிபியு + அட்ரினோ 320 ஜிபியு) கொண்டிருப்பதால் தாறுமாறான வேகத்தில் இயங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை உலகின் மிக வேகமான ஆன்ட்ராய்டு போன் என்று அழைக்கலாம்.

மேலும் இந்த போன் 2ஜிபி டிடிஆர்2 ரேம், 16ஜிபி சேமிப்பு, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ அவுட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிற்கு வருமா என்று தெரியவில்லை. இந்த போன் ரூ.15,000க்கு விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X