உலகின் மெல்லிய ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.18,999 தான்

Posted By:

உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது உலகின் மெல்லிய ஸ்மார்ட்போனாக விளங்கும் ஜியோனி ஈலைஃப் எஸ்5.1 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க போகும் இந்த மெல்லிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களையும் கொஞ்சம் பாருங்க..

உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 தாங்க..

ஈலைஃப் எஸ்5.1,  4.8 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டு கார்னிங் கொரில்லா 3 கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராமும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் உள்ளது.

உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 தாங்க..

புதிய ஈலைஃப் எஸ் 5.1 ஆன்டிராய்டு கிட்காட் மற்றும் ஜியோனியின் அமிகோ 2.0 யூஐ மூலம் இயங்குகிறது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 தாங்க..

மேலும் 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் இருப்பதோடு 2050 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.English summary
World’s thinnest smartphone in India at Rs 18,999. Gionee has launched the thinnest smartphone in India called Elife S5.1 at a price of Rs 18,999. The smartphone is expected to be available by next week.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்