Home
Mobile

60 நொடிகளில் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன்.!

தற்போதைய நிலையில் ஸ்மார்ட் மொபைல் போன் இல்லாமல் வாழ்க்கை ஸ்மார்ட்டாகவோ அல்லது சுவாரஸ்யமாகவோ இருக்காது

By Abu Bakker Fakkirmohamed

தற்போதைய நிலையில் ஸ்மார்ட் மொபைல் போன் இல்லாமல் வாழ்க்கை ஸ்மார்ட்டாகவோ அல்லது சுவாரஸ்யமாகவோ இருக்காது. அனைத்து வகையான ஊடகங்களையும், தொடர்புகளையும் கையெட்டும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும் என்றால் கையில் நிச்சயமாக ஸ்மார்ட் மொபைல் போன் வேண்டும். ஆனால் பெரும்பாலான மொபைல் போன்கள் கைகளுக்குள் அடங்குவதில்லை. சட்டைப் பையில் அல்லது பேன்ட் பாக்கெட்டிலும் அடங்கி இருப்பதில்லை. அனைத்து வகையான வசதிகளுடன் உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய வகையில் ஸ்மால் சைசில் ஒரு ஸ்மார்ட் போன் கிடைக்காதா? என்னும் ஏக்கத்தைத் தீர்ப்பதற்காக வந்துவிட்டது, உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட் போன் யுனிஹெர்ட்ஸ் ஆடம் (UnihertzAtom).

கையடக்க ஸ்மார்ட் போன் - யுனிஹெர்ட்ஸ் ஆடம்

எத்தகைய கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தினாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயங்கக் கூடிய முரட்டு ஸ்மார்ட் போனாக உருவாகியுள்ளது யுனிஹெர்ட்ஸ் ஆடம் (UnihertzAtom). தயாரிப்புத் திட்டத்தின் நிதித் தேவைக்காக கிக்ஸ்டார்டர் (Kickstarter) நிறுவனத்தின் மூலமாக ஜீன் மாதம் 5 ஆம் தேதி, இணையத்தில் வெளியிட்ட ஒரு நிமிடத்திற்குள் யுனிஹெர்ட்ஸ் ஆடம் போன் தன்னுடைய இலக்கை எட்டிவிட்டது. இதன் மூலம் இந்தப் போனுக்கான எதிர்பார்ப்பும் வரவேற்பும் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

60 நொடிகளில் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன்.!

இலக்கைத் தாண்டிய வரவேற்பு

யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் நாம் அதிகம் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தாலும், கிக்ஸ்டார்ட்டரில் (Kickstarter) அதற்குக் கிடைத்த வரவேற்பு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போதுவரை அது 5,86,975 டாலர் அளவுக்கான நிதி உத்தரவாதத்தைப் பெற்றுள்ளது. 50,000 டாலர் என நிர்ணயித்திருந்த நிதி இலக்கினைக் காட்டிலும் இது 11 மடங்கு அதிகம் ஆகும்.

அளவு சிறியது ஆனால் மிக வலிமையானது

யுனிஹொ்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு யுனிஹொ்ட்ஸ் ஜெல்லி என்னும் சிறியரக ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள போன், 96 மி.மீட்டர் உயரம், 45 மி.மீட்டர் நீளம், 18 மி.மீட்டர் தடிமன் அளவுடன் மிகச்சிறிய ஸ்மார்ட் போனாக உருவாகியிருக்கிறது. மிகக் கடினமான சூழலையும் எதிர் கொள்ளும் ஆற்றலுடன் இப் போன் உருவாக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து கிழே விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என இந்நிறுவனம் வாக்குறுதி தருகிறது.

அசத்தலான அம்சங்கள்

அளவு சிறியதாக இருந்தாலும் வசதிகளில் எவ்விதக் குறைபாடுகளும் இல்லை. ஒரு ஸ்மார்ட் போனுக்கு உரிய அனைத்து வகையான சிறப்பு அம்சங்களையும் இப்போன் கொண்டுள்ளது. மிக வேகமாகச் செயல்படக் கூடிய ARM Cortex-A53 செயலி (processor), 4GB RAM மற்றும் 64GB சேமிப்புத்திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறிய போன் என்பது தெரியாத வகையில் அனைத்துச் செயல்திறனையும் கொண்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள்

இதுமட்டும் அல்லாமல், பல பயன்பாட்டுக் கருவிகளின் மூலமாக இயங்குவதற்கேற்ற தகவமைப்பினையும் கொண்டுள்ளது. அருகில் உள்ள கருவிகளோடு மிக விரைவாகத் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற NFC (Nearest Field Communication) தொழில்நுட்பம், அடாப்டர் மூலமாக பிறவற்றோடு இணைப்பதற்கு ஏற்ற USB, தண்ணீருக்குள் மூழ்கினாலும் மற்றும் தூசு படிந்தாலும் பாதிப்படைவதில்லை என்பதற்கான IP68 தரச் சோதனைச் சான்றிதழ் என ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் இப்போனில் உள்ளன. விரல்ரேகைப் பதிவு, முகத்தோற்றப் பதிவு உள்நுழைவு, ஆகிய தொழில் நுட்பங்களையும் இப்போன் கொண்டுள்ளது. 2,000 mAh அளவு கொண்ட பேட்டரி சிறிய திரை கொண்ட போனுக்கு நீண்ட நேரம் சக்தியைக் கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சமீபத்திய வரவான ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ செயலி மூலம் இப்போன் இயங்கக் கூடியது.

கேமராக்களின் திறன்

16 MP திறன் கொண்ட பின்புற கேமரா 8 MP திறன் கொண்ட முன்புற கேமராவையும் இப்போன் பெற்றுள்ளது. வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்லும் பொழுது கைகளில் பொருத்திக் கொள்வதற்கு ஏற்பவும், பைக் மற்றும் சைக்கிளில் செல்லும் பொழுது ஹேண்டில் பாரில் பொருத்திக் கொள்வதற்கு ஏற்பவும் ஹேங்கர் வசதிகள் போனோடு இணைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 10 வரை பதிவு செய்யலாம்

யுனிஹெர்ட்ஸ் ஆட்டம் (Unihertz Atom) போனுக்கான கிக்ஸ்டார்ட்டர் மூலமான இணைய முன்பதிவு ஜூலை 10 ஆம் தேதி வரை இருக்கும். இப்பதிவின் பொழுது போனுக்கான 300 டாலர் விலையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தள்ளுபடியினை வாடிக்கையாளர்கள் பெறலாம். தற்போது 160 டாலர், 180 டாலர், 200 டாலர் அளவுக்கான தள்ளுபடி பெறக் கூடிய பரிசுத் திட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. ஆனால், 80 டாலர் அளவுக்குத் தள்ளுபடி பெறக் கூடிய திட்டங்கள் இன்னும் உள்ளன. எனினும் கிக்ஸ்டார்ட்டர் மூலமான திட்ட அறிமுக இணைய முகாம்களின் நிறை குறைகளை நன்றாக ஆராய்ந்த பிறகு வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதுதான் நல்லது.

Best Mobiles in India

English summary
World’s smallest 4G smartphone hits funding target in 60 seconds.. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X