Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?

|

முதல் காலாண்டில் ஒட்டுமொத்த சந்தையையும் ஆக்கிரமித்து அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் முதல் ஆறு இடத்தில் சாம்சங் நான்கு இடத்தையும், சியோமி இரண்டு இடத்தையும் தட்டிப்பறித்துள்ளது.

முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்

முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 51 (4 ஜி) 2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உலகிலேயே அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று ஆராய்ச்சி நிறுவனம் ஸ்ட்ராடஜி அனலிட்டிக்ஸ் கூறுயுள்ளது. அதிக விற்பனையான ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் ரெட்மி 8 இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

முதல் ஆறு ஸ்மார்ட்போன்கள்

முதல் ஆறு ஸ்மார்ட்போன்கள்

பட்டியலில் முதல் ஆறு ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கிலிருந்து சாதனங்கள் நான்கு இடங்களையும், சியோமியின் இரண்டு சாதனங்கள் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளது.

டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

சாம்சங் கேலக்ஸி ஏ 51 முதலிடம்

சாம்சங் கேலக்ஸி ஏ 51 முதலிடம்

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ 51 (4 ஜி) 2.3 சதவீத பங்கைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 8 ஒட்டு மொத்த சந்தையில் இரண்டாவது விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இது சந்தை பங்கில் 1.9 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

4 இடத்தில் சாம்சங், 2 இடத்தில் சியோமி

4 இடத்தில் சாம்சங், 2 இடத்தில் சியோமி

மூன்றாவது இடத்தை மீண்டும் சாம்சங் தட்டிப்பறித்துள்ளது அதன்படி கேலக்ஸி எஸ் 20 + ஸ்மார்ட்போனானது 1.7 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ் மற்றும் ரெட்மி நோட் 8 ஆகியவை தலா 1.6 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஆண்ட்ராய்டு 10 ஐ, ஒரு யுஐ 2.0 உடன் இயக்கி, 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஃபுல் எச்டி + (1080x2400 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் மற்றும் இன்ஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி உள் சேமிப்பை சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 51 இல் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

48 எம்பி பிரைமரி கேமரா

48 எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி 8

ரெட்மி 8

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இந்தியாவில் ரூ .8,999 ஆகும். இந்த சாதனம் 6.22 இன்ச் எச்டி + டாட் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது மேலே ஒரு வாட்டர் டிராப் உச்சநிலையைக் கொண்டுள்ளது. ரெட்மி 8 முன்பக்கத்தில் 8 எம்பி ஏஐ செல்பி கேமராவுடன் வருகிறது. சாதனத்தின் பின்புறத்தில் ரெட்மி 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 12MP சோனி ஐஎம்எக்ஸ் 363 கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி லென்ஸ் ஆகியவை அடங்கும். ரெட்மி 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.73,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வை பெற்று ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999-விலையில் வாங்க கிடைக்கும்.

ரெட்மி 8 4ஜிபி ரேம்

ரெட்மி 8 4ஜிபி ரேம்

ரெட்மி 8 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வை பெற்று ரூ.9,299-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் சாதனம் பிளிப்கார்ட்,மி.காம் வலைதளங்களிலும் கிடைக்கும்.

ஏடிஎம் மூலம் அரிசி விநியோகம்: தினமும் 1000 பேருக்கு., சமூக இடைவெளி கட்டாயம்!ஏடிஎம் மூலம் அரிசி விநியோகம்: தினமும் 1000 பேருக்கு., சமூக இடைவெளி கட்டாயம்!

கேலக்ஸி ஏ10:

கேலக்ஸி ஏ10:

சாம்சங் நிறுவனத்தின் மேம்பட்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொதுமக்களிடம் ஏகபோக வரவேற்பு உள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

source: indiatvnews.com

Best Mobiles in India

English summary
world's highest selling Android smartphone in Q1 2020: top six smartphones is samsung, xiaomi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X