இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்: பாயும் புலியான Moto!

|

Moto X30 Pro ஸ்மார்ட்போன் தான் 200 எம்பி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 200 எம்பி கேமரா மட்டுமில்லை ஒவ்வொன்றும் மேம்பட்ட அம்சங்கள் தான்.

வியப்படைய வைக்கும் முயற்சி

வியப்படைய வைக்கும் முயற்சி

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. சந்தையில் தங்கள் ஸ்மார்ட்போன் தான் பெஸ்ட் ஆகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனங்களும் எடுக்கும் முயற்சி வியப்படைய வைக்கிறது. அதன்படியான ஒரு ஸ்மார்ட்போன் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

200 எம்பி கேமரா மட்டும் ஸ்பெஷல் அல்ல

200 எம்பி கேமரா மட்டும் ஸ்பெஷல் அல்ல

Moto X30 Pro ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான அறிக்கையில் Moto X30 Pro 200 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மோட்டோ நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது. இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் 200 எம்பி கேமரா மட்டும் ஸ்பெஷல் அல்ல, ஒவ்வொன்றும் ஸ்பெஷல் தான்.

125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மோட்டோ நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போனான Moto X30 Pro ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய ப்ரீமியம் சிப்செட் ஆகும்.

Moto X30 Pro ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவாகும். Moto X30 Pro ஆனது சமீபத்தில் Geekbench இல் XT2241-1 என்ற எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு அம்சங்களும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்

உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்

Weibo பதிவின் மூலம் Moto X30 Pro ஸ்மார்ட்போனானது 200 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 200 எம்பி கேமரா உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகும்.

மேம்பட்ட சிப்செட், சமீபத்திய ஓஎஸ் ஆதரவு

மேம்பட்ட சிப்செட், சமீபத்திய ஓஎஸ் ஆதரவு

Moto X30 Pro ஸ்மார்ட்போனானது சமீபத்திய மற்றும் மேம்பட்ட சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மறறும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இயக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கேமரா லென்ஸ், சென்சார் என ஒவ்வொன்றும் முக்கியம்

கேமரா லென்ஸ், சென்சார் என ஒவ்வொன்றும் முக்கியம்

ஸ்மார்ட்போன்களில் 64 எம்பி, 108 எம்பி, 200 எம்பி என கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இது எதுவும் ஐபோன் கேமராவுக்கு இணையாக இருப்பதில்லை. ஆனால் இதேபோல் இந்த ஸ்மார்ட்போனையும் சுட்டிக் காட்டிவிட முடியாது. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா லென்ஸ், சென்சார் என ஒவ்வொன்றும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

மேம்பட்ட ஆதரவுடன் கேமரா லென்ஸ்கள்

மேம்பட்ட ஆதரவுடன் கேமரா லென்ஸ்கள்

மோட்டோ எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா ஆனது 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீள சென்சார்களை கொண்டிருக்கிறது.

இதன் 85 மிமீ லென்ஸ் ஆனது நெருக்கமான உருவப்பட காட்சிகளை பதிவு செய்கிறது.

50 மிமீ லென்ஸ் ஆனது நிலையான பார்வை கோணத்துடன் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இதன் 35 மிமீ லென்ஸ் ஆனது மிக நெருக்கமான கோணத்தை வழங்குகிறது.

லென்ஸ், சென்சார் எல்லாம் எப்படி செயல்படுகிறது என தெரியாதவரா நீங்கள். முதலில் அதை மேலோட்டமாக தெரிந்துக் கொள்ளலாம்.

கண்டிப்பாக ஆச்சரியப்படும் வகையில் புகைப்படங்கள்

கண்டிப்பாக ஆச்சரியப்படும் வகையில் புகைப்படங்கள்

கேமராவில் உள்ள ஒரு மெகாபிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களை உள்ளடக்கியது. புகைப்படத்தை ஆழமாக ஜூம் செய்யும் போது காட்சி மங்களாகி கட்டம் கட்டமாக தோன்றும். அந்த ஒவ்வொரு கட்டமும் ஒரு பிக்சல் ஆகும்.

அதன்படி நீங்கள் 10 மெகாபிக்சல் கேமராவில் புகைப்படம் எடுத்தால் அதில் 1 கோடி பிக்சல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது 200 எம்பி கேமராவில் புகைப்படம் எடுத்தால் காட்சி துல்லியம் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

Moto X30 Pro சிறப்பம்சங்கள்

Moto X30 Pro சிறப்பம்சங்கள்

Moto X30 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் சமீப காலமாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரெஷிங் ரேட் மற்றும் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

மோட்டோரோலாவின் வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் வேரியண்ட்

8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் வேரியண்ட்

Moto X30 Pro ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
world's first smartphone to debut with 200MP camera: Moto X30 Pro launching date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X