உலகின் முதல் 108 எம்.பி கேமரா ஸ்மார்ட்போன்! அறிமுக தேதி லீக்!
சியோமி நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி ஷாங்காயில், அந்நிறுவனத்தின் நிகழ்ச்சியை நிகழ்த்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சியோமி நிறுவனத்தின் அடுத்த MIUI 11 மென்பொள், சியோமி Mi Mix 4 மற்றும் சியோமி Mi 9s ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது இந்த புதிய சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் பற்றிய சில சிறப்பம்சங்கள் மற்றும் விபரங்கள் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. நம்ப முடியாத ஒரு முக்கிய தகவலுடன் ஸ்மார்ட்போன் பயனர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சியாமி நிறுவனம்.

சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன், உலகின் முதல் 108 மெகா பிக்சல் கேமரா சென்சார் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 108 மெகா பிக்சல் சென்சார் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆப்டிகல் சென்சார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கின் புதிய ஆப்டிகல் சென்சார் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் சியோமி தயாரிப்பு, சியோமி மி மிக்ஸ் 4 ஆகும். சியோமி தற்போது புதிய நான்கு ஸ்மார்ட்போன்களில், இந்த புதிய 108 எம்.பி கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சோதித்து வருகிறது. அவற்றில் சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் தான், இந்த சேவையுடன் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன், 2K ரெசொலூஷன் உடன் கூடிய கர்வுடு கிளாஸ் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 855+ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய சியோமி மி மிக்ஸ் 4, 12 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் சேமிப்புடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில், 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான சேவைக்காக பெரிய அளவிலான 4500 எம்.ஏ.எச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. விலை மற்றும் முழு விபரம் வலைத்தளத்தில் கசிந்தால் உடனே அப்டேட் தருகிறோம் அதுவரை காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications