உலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!!

Written By:

இஸ்ரேல் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சிரின் லேப்ஸ் உலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவியினை அறிமுகம் செய்துள்ளது. சோலாரின் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருவியானது ஸ்மார்ட்போன்களின் ரோல்ஸ் ராய்ஸ் என கூறப்படுகின்றது. விலை உயர்ந்த ரால்ஸ் ராய்ஸ் ஆண்ட்ராய்டு கருவி குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பாதுகாப்பு

1

சிரின் லேப்ஸ் நிறுவனம் சோலாரின் கருவியை உலகின் மிகவும் பாதுகாப்பான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என தெரிவித்துள்ளது. தற்சமயம் உலகில் இருக்கும் அதி நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

சிப்செட்

2

சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 24 எல்டிஇ பிரான்ட்களை சப்போர்ட் செய்வதோடு தடையில்லா வை-பை கனெக்டிவிட்டி பெற முடியும்.

கேமரா

3

இந்த ஸ்மார்ட்போனில் 23.8 எம்பி ப்ரைமரி கேமரா, லேசர் ஆட்டோஃபோகஸ், ஃபோர்-டோன் ப்ளாஷ், மற்றும் முன்பக்க ப்ளாஷ் கொண்டிருக்கின்றது. இதோடு 8 எம்பி செல்பீ கேமரா, ப்ளாஷ் மற்றும் எலக்ட்ரிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

திரை

4

சோலாரின் கருவியில் 5.5 இன்ச் கொரில்லா கிளாஸ்-4 ஐபிஎஸ் திரை மற்றும் எல்இடி 2கே ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. இதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

எடை

5

சோலாரின் ஸ்மார்ட்போன் 250கிராம் எடை கொண்டிருப்பதோடு 78எம்எம் அகலம் X 159.8எம்எம் X 11.1எம்எம் அளவு கொண்டுள்ளது.

மெமரி

6

சோலாரின் கருவியில் 4000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம், மற்றும் 128 ஜிபி நீட்டிக்க முடியாத மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு குவால்காம் குவிக் சார்ஜ் 2.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நிறம்

7

ஃபையர் பிளாக் கார்பன் டைட்டானியம் கொண்ட லெதர், டைமண்ட் போன்று இருக்கும் கார்பன் கொண்ட ஃபையர் பிளாக் லெதர், மஞ்சள் நிற தங்கம் கொண்ட ஃபையர் பிளாக் கார்பன் லெதர் மற்றும் டைமண்ட் போன்று இருக்கும் கார்பன் கொண்ட க்ரிஸ்டல் வைட் லெதர் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

திறன்

8

சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியானது தண்ணீர் மற்றும் தூசு ரெசிஸ்டன்ட் வசதி கொண்டு ஐபி54 தர சான்றிதழ் கொண்டிருக்கின்றது.

விற்பனை

9

இந்திய மதிப்பில் ரூ.9,00,000 விலை கொண்ட சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியின் விற்பனை லண்டனில் ஜூன் 30 ஆம் தேதியும் இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரம்

10

பொதுவாக ஐபோன் மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அதிக விசேஷம் கொண்டவைகளாக தயாரிக்கப்பட்டு ஆடம்பர கருவியாக விற்பனை செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் தற்சமயம் இணைந்துள்ளது. எனினும் இந்த கருவி ஒரே நிறுவனத்தின் பெயரில் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
World's expensive smartphone Solarin launched Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot