VIVO நீ வேற லெவல் பா.. 209 கிராமில் OLED டிஸ்பிளே, 3 50MP கேமரா, 16GB ரேம், 1TB மெமரி, 6000mAh பேட்டரி!
எடை குறைவான வடிவமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மீது பலரும் ஒரு கண் வைத்து இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்15 மாடலின் (162 கிராம்) அறிமுகம் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலின் (163 கிராம்) அறிமுகம் மொபைல் சந்தையில் புதிய வகையான சலசலப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இப்போது பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் "லைட்ஸ்ட் ஸ்மார்ட்போனை" அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த போட்டியில் விவோ நிறுவனம் ஒருபடி மேல் சென்று - உலகின் மிகவும் லைட் வெயிட் ஆன போல்டபிள் ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. அதை அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்துள்ளது.

என்ன மாடல்? அது விவோ எக்ஸ் போல்ட் 5 (Vivo X Fold 5) ஸ்மார்ட்போன் ஆகும். சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போ (Weibo) வழியாக விவோ சீனாவின் தயாரிப்பு மேலாளர் ஆன ஹான் பாக்சியோ (Han Boxiao) வெளியிட்ட வீடியோவில், விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது உலகின் மிக இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை உறுதி படுத்தியுள்ளார்
விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் ஆகும்? விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் (ஜூன் 2025) சீனாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதையும், ஜூலை தொடக்கத்தில் உலகளாவிய வெளியீட்டை எதிர்பார்க்கலாம் என்பதையும் ஹான் பாக்சியோ உறுதிப்படுத்தி உள்ளார்.
விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போனின் எடை எவ்வளவு இருக்கும்? இந்த ஸ்மார்ட்போன் வெறும் 209 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதன் முன்னோடியான விவோ எக்ஸ் போல்ட் 3 மாடல் 219 கிராம் எடையையும், ஒப்போ பைண்ட் என்5 (OPPO Find N5) மாடல் 229 கிராம் எடையையும் கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போனை விரிக்கும்போது இது 4.3 மிமீ மற்றும் மடிக்கும்போது 9.33 மிமீ அளவும் கொண்டதாக இருக்கும். இருப்பினும் இது ஸ்லிம் ஆன போல்டபிள் ஸ்மார்ட்போன் என்கிற "பட்டத்தை" கோராது, ஏனெனில் இந்த மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஹானர் மேஜிக் வி5 (Honor Magic V5) ஸ்மார்ட்போன் ஆனது மடிக்கப்படும் போது 8 மிமீ இருக்கும் என்று வதந்திகள் பரவியுள்ளது.
விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ எக்ஸ் போல் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் LTPO OLED கவர் டிஸ்பிளே மற்றும் 8.03-இன்ச் AMOLED இன்னர் டிஸ்பிளே ஆகியவற்றை கொண்டிருக்கும். இரண்டுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை பேக் செய்யலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50MP ப்ரைமரி கேமரா, 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா-வைட் மற்றும் டூயல் 20MP செல்பீ கேமராக்களை கொண்டிருக்கலாம்ம்.
இது 16 GB வரை ரேம், 1TB ஸ்டோரேஜ் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5) / பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) உடன் அனுப்பி வைக்கப்படலாம்.
விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது IPX4 மதிப்பிடப்பட்டதக இருக்கும் மற்றும் விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் லேங்குவேஜை ஒரு பெரிய வட்ட வடிவிலான கேமரா செட்டப் உடன் சற்றே மாற்றி அமைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6000mAh+ பேட்டரியை கொண்டிருக்கலாம்.
விவோ எக்ஸ் 5 போல்ட் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இது இலகுவான வடிவமைப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்களை பயன்படுத்தும் ஒப்போ பைண்ட் என்5 மற்றும் ஹானர் மேஜிக் வி5 ஆகிய மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்போது, விவோ எக்ஸ் போல்ட் 3 மாடலை விட மலிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications