Moto-வின் முரட்டு போன்.. 144Hz டிஸ்பிளே, 125W சார்ஜிங், 12GB ரேம், AI Pro-Grade கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?
ஏஐ-பவர்டு ப்ரோ-கிரேட் கேமரா (AI-Powered Pro-Grade Camera) உடன் வரும் முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய.. மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தயாராக உள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் சீரீஸின் கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) என்கிற புதிய ஸ்மார்ட்போனை "கூடிய விரைவில்" அறிமுகம் செய்யவுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட இது வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் உள்ள லேண்டிங் பக்கத்தின் (Landing Page) படி, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ-பவர்டு ப்ரோ-கிரேட் கேமராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். கூடவே இது ட்ரூ கலர் டிஸ்பிளேவையும் (True Color Display) கொண்டிருக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் (Triple Rear Camera Setup) 50எம்பி மெயின் கேமரா இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பில் ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் (AI Adaptive Stabilaization), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் (AI Photo Enhancement Engine), டில்ட் மோட் (Tilt Mode) உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உடனான 6.7-இன்ச் பிஓஎல்இடி 1.5கே டிஸ்பிளேவை (pOLED 1.5K Display) கொண்டிருக்கும். இது எஸ்ஜிஎஸ் ஐ ப்ரொடெக்ஷனையும் (SGS Eye Protection) கொண்டிருக்கும். மேலும் கலர் அக்யூரேஸிக்காக, இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பான்டோன் (Pantone) மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளது என்பதையும் மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் சிலவர் (Silver) என்கிற 3 கலர்களில் அறிமுகமாகும் என்பதையும் பிளிப்கார்ட் வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. பர்பிள் மற்றும் பிளாக் கலர் வேரியண்ட்கள் ஆனது மேட் ஃபினிஷ் பேக் பேனல் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பது போல் தெரிகிறது; சில்வர் கலர் வேரியண்ட் ஆனது மெட்டாலிக் ஃபினிஷை கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட்டை பேக் செய்யலாம். இதன் கேமரா செட்டப்பில் 6எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) மற்றும் ஆட்டோ போகஸ் உடனான அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் (Ultra-wide-angle Camera) இடம்பெறலாம்.
பேட்டரியை பொறுத்தவரை 125W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் (Wireless Charging Support) உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். கடைசியாக இது 12ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 முதல் ரூ.64,999 க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை நிர்ணயம் ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு நிகழ்வில்வெளிப்படுத்தப்படும். அறிமுகத்திற்கு பின்னர் பிளிப்கார்ட் வழியாகவே விற்பனைக்கு வரும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications








