கார் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தாருமாறாக போட்டோவை அனுப்பி மிரளச் செய்த பெண்.! வைரல்.!

"அடுத்த நாள் நான் எனது மின்னஞ்சலை பார்க்கும் போது இந்த பதிலை கண்டேன்: 'ஹாய் அலிஸ்ஸா, நீங்கள் எடுத்த புகைப்படங்கள் போன்று தான் எனக்கு படங்கள் வேண்டும்.

|

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், காரின் புகைப்படங்களுக்கு பதிலாக தனது புகைப்படங்களை கார் இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டிற்கு அனுப்பிய சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு   தனது போட்டோவை அனுப்பி மிரளச் செய்த பெண்.!

25 வயது ஆசிரியரான அலிஸ்ஸா ஸ்ட்ரிங்ஃபெலோ, பாட்டியின் கார் இன்ஸ்யூரன்ஸ் பாலிசியின் மூலம் தனது காரை காப்பீட்டு செய்ய விரும்பினார்.பேஸ்புக் இடுகையில், அந்த "பொன்னான தருணத்தை" பகிர்ந்துள்ள அவர், அது
எப்படி நடந்தது என்பதை விளக்கியுள்ளார்.

"பல கார்களின் மூலம் பணத்தை சேமிக்க அனைவருக்கும் தெரியும். சிங்கிள் மற்றும் இளம் பருவத்தில் இருப்பதால், எனது காப்பீட்டு மிகவும் அதிகமாக உள்ளது" என்று அவர் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

காப்பீட்டை பெறுவதற்கு என்னென்ன தேவை

காப்பீட்டை பெறுவதற்கு என்னென்ன தேவை

தனது யோசனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பாட்டியை பேத்தி கேட்ட பிறகு, அந்த பாட்டி தன்னுடைய காப்பீட்டு முகவரை அழைத்து அந்தச் செய்தியை தெரிவித்து, தனது பேத்தி காப்பீட்டை பெறுவதற்கு என்னென்ன தேவை என்று
கேட்டு தெரிந்துகொண்டார்.

நேராக எடுக்கப்பட்ட ஒரு படம்

நேராக எடுக்கப்பட்ட ஒரு படம்

பின்னர் மாலையில் பேத்தியை தொடர்புகொண்ட பாட்டி பேத்தியிடம், அவரது கார் டிரைவரின் லைசென்ஸ் எண், பிறந்த தேதி, " நேராக எடுக்கப்பட்ட ஒரு படம் மற்றும் ஒவ்வொரு பக்கமும எடுக்கப்பட்ட படம்" ஆகியவற்றை
காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

 காப்பீட்டு முகவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை படித்ததும் அதிர்ச்சியடைந்தார்

காப்பீட்டு முகவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை படித்ததும் அதிர்ச்சியடைந்தார்

பாட்டி கூறியதை தவறாக புரிந்து கொண்டு, முன்புறம் மற்றும் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்ட அவளது படங்களை
அந்த ஏஜெண்டிற்கு அனுப்பினார் அந்த புத்திசாலி ஆசிரியை.அடுத்த நாள் காப்பீட்டு முகவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை படித்ததும் அதிர்ச்சியடைந்தார்:

"அடுத்த நாள் நான் எனது மின்னஞ்சலை பார்க்கும் போது இந்த பதிலை கண்டேன்: 'ஹாய் அலிஸ்ஸா, நீங்கள் எடுத்த
புகைப்படங்கள் போன்று தான் எனக்கு படங்கள் வேண்டும். ஆனால் அது உங்களுடைய வாகனத்தின் படமாக
இருக்க வேண்டும்' " என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சொல்லி தெரியவேண்டியதில்லை

சொல்லி தெரியவேண்டியதில்லை

சங்கடமாக உணர்ந்த அவர் உடனடியாக தவறை புரிந்துகொண்டு தனது காரின் புகைப்படங்களை விரைவாக காப்பீட்டு முகவருக்கு அனுப்பினார்.

""சொல்லி தெரியவேண்டியதில்லை. அந்தளவிற்கு நான் அபத்தமாக சங்கடமாக உணர்ந்தேன். என்னுடன் பணிபுரியும்
அனைவரும் எனது வெளிப்படையான தவறானபுரிதலை கண்டு எள்ளி நகையாடினர் " என்று தனது முகநூல் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.

 தவறு நிகழ்ந்ததுள்ளது

தவறு நிகழ்ந்ததுள்ளது

காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து அவரது பாட்டிற்கு வந்து, பிறகு இவரிடம் வந்த அறிவுறுத்தல்களில் சில முக்கிய விவரங்கள் இல்லாததால், தகவல்தொடர்பில் தவறு நிகழ்ந்ததுள்ளது. காப்பீட்டு முகவரின் முழு அலுவலகமும் அந்த புகைப்படங்களை பார்த்தபோது, இழிவாகவும், சங்கடமாகவும் இருந்ததாக ஸ்ட்ரிங்பெலோ கூறியுள்ளார்.

என்னையே காப்பீடு செய்துகொண்டேன்

என்னையே காப்பீடு செய்துகொண்டேன்"

இந்த துர்சம்பவம் பற்றி பின்னர் பேத்தியை தொடர்புகொண்ட பாட்டி, "அலிஸ்ஸா , நீ அவருக்கு உனது புகைப்படங்களை அனுப்பினாயா!? உன்னுடைய காரின் புகைப்படங்களை தானே அனுப்பியிருக்க வேண்டும்! " என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த காப்பீட்டு முகவர் அலிஸ்ஸாவின் பாட்டியை தொடர்புகொண்டு, அவரது 25 வயது பேத்தி என்ன அனுப்பினார் என்பதை கூறிய பிறகு, இருவரும் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர் என கூறியுள்ளார் அலிஸ்ஸா.

சிறப்பு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிற அலிஸ்ஸா, "நான் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க முடிவு
செய்தபோது, என் பாட்டியின் கார் காப்பீட்டில் என்னையே காப்பீடு செய்துகொண்டேன்" என்கிறார். "அவர் கார்களுக்கு
தான் காப்பீடு செய்கிறார். உனக்கு இல்லை" என அவரது பாட்டி கிண்டலடித்தார் எனவும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் பதிவு செய்யலாமா ?

தனது புகைப்படங்களை முகவருக்கு அனுப்பும் முன்பு அவருடைய அம்மாவிடம் படங்களை எடுத்து தரும்படி கேட்டுள்ளார். அப்போது முகவருக்கு எதற்கு இந்த படங்கள் தேவை என்று இருவரும் விவாதித்துள்ளனர். ஆனால் கடைசிவரை காரின்
புகைப்படங்கள் தான் அவருக்கு தேவை என இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

"ஒன்று பட்டறிவு வேண்டும் இல்லையேல் அனுபவ அறிவு வேண்டும். இரண்டாவது கண்டிப்பாக தன்னிடம் இல்லை" என்கிறார் அவர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, இவ்வளவு சங்கடமான தனது "பொன்னான" தருணத்தை பேஸ்புக்கில் பதிவு செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் மக்களுக்கு சிரிக்க ஒரு விசயம்
கிடைக்கும் என நம்பினார்.

நண்பர்களை டேக் செய்துள்ளனர்

அதன் பின்னர் வைரலான அவரது பேஸ்புக் பதிவு, 24,000 முறை பகிரப்பட்டுள்ளது. மேலும் 15,000க்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளது.அவற்றில் பெரும்பாலான கமெண்ட்களில், பலர் இதுபோன்று செய்யும் தங்கள் நண்பர்களை டேக் செய்துள்ளனர் மற்றும் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற இதுபோன்ற தவறுகளை குறிப்பிட்டுள்ளனர்.

மற்றவர்கள் நன்கு சிரித்துவிட்டு , இதுபோன்ற தவறுகள் யாருக்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி ஆறுதல்
தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Woman Mistakes Instructions and Sends Photos of Herself to Car Insurance Company: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X