அறிமுகமாகி 1 மாசம் கூட ஆகல.. ரூ.5000 விலை குறைப்பை பெற்ற புத்தம் புது Redmi 5G போன்.. என்ன மாடல்?
2024 ஆம் ஆண்டு சுந்தந்திர தினத்தை (Independence day 2024) முன்னிட்டு, அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) ஆனது இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று முடிவடைய உள்ளது. அதற்குள் ஆபர் விலையில் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால்.. நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனை தான்!
ஏனென்றால், கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.5000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது அறிமுகம் செய்யப்பட்டு 1 மாதம் தான் ஆகிறது என்பதை எல்லாம் பார்க்காமல், அமேசான் வலைத்தளமானது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் மீது அபாரமான ஆபரை அறிவித்துள்ளது.

இந்த ஆபரின் கீழ் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விளையான ரூ.17,999 க்கு பதிலாக வெறும் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் முதல் விற்பனையின் போதும் கூட ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது வெறும் ரூ.13,999 க்கு வாங்க கிடைத்தது.
ஆனால் அந்த சமயத்தில் "இது பரிந்துரைக்கப்பட்ட விலை" என்று ரெட்மி நிறுவனம் கூறி இருந்தது. அதாவது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலையை அது அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அறிமுகத்தின் போது கிடைத்த விலையை விட ரூ.1000 மலிவான விலைக்கு அமேசான் வலைத்தளம் வழியாக ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது .
ரெட்மி 13 5ஜி வாங்கலாமா? அறிமுகனை வேகத்தில் ரூ.5000 விலை குறைப்பா? ஒருவேளை சுமாரான போனாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுவது சகஜமே. அந்த அடிப்படையில், ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 நல்ல காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 3 நியாயமான காரணங்களையும் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 காரணங்கள்: முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதறகான 3 காரணங்கள்: முதல் காரணம் - இது பல எண்ணிக்கையிலான மூன்றாம் தரப்பு ஆப்களை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே ஸ்மூத் ஆக இருக்கிறது ஆனால் ப்ரைட் ஆனதாக இல்லை. இதன் டிஸ்பிளே ப்ரைட்னஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம். மூன்றாவது காரணம் - இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், 6.79-இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5030mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








