Home
Mobile

ஆரம்பமே ரூ.5000 OFFER.. ஒரு முடிவோட விற்பனை ஆரம்பித்த Motorola-வின் முரட்டு போன்.. என்ன மாடல்?

கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் "முரட்டு ஸ்மார்ட்போன்" ஒன்று, பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனையை தொடங்கியுள்ளது. எந்த விதமான ஆபர்களும் இல்லாமலே அட்டகாசமான வரவேற்பை பெறும் அளவிலான அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மீது.. அறிமுக சலுகையாக ரூ.5000 நேரடி தள்ளுபடி (Rs.5000 Introductory offer price) அறிவிக்கப்பட்டுள்ளதால்.. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்னும் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன மாடல்? அசல் அறிமுக என்ன விலை? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூன் 24 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல், பிளிப்கார்ட் வழியாக விற்பனையை தொடங்கியது.

ஆரம்பமே ரூ.5000 OFFER..  விற்பனை ஆரம்பித்த Motorola Edge 50 Ultra 5ஜி!

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவில் என்ன ஸ்பெஷல்? எஃப்எஸ்சி-ஆல் சான்றளிக்கப்பட்ட ரியல் வுட் பினிஷ் கொண்ட வேரியண்ட் உட்பட மேலும் 2 வேரியண்ட்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனில் மோட்டோ ஏஐ என்று அழைக்கப்படும் பல்வேறு செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களில் டெக்ஸ்ட் ப்ராம்ப்ட் அடிப்படையிலான இமேஜ் ஜெனரேஷனுக்கான ஏஐ மேஜிக் கேன்வாஸ் மற்றும் கஸ்டமைஸ்டு தீம்களை உருவாக்குவதற்கான ஸ்டைல்சின்க் (StyleSync) ஆகியவைகளும் அடங்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவின் விலை மற்றும் வேரியண்ட்கள்: 12ஜிபி ரேம் (LPDDR5x) + 512ஜிபி (UFS 4.0) ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.59,999 ஆகும். இது நார்டிக் வூட் என குறிப்பிடப்படும் ரியல் வுட் பினிஷ் வடிவமைப்புடன் சேர்த்து. மேலும் இரண்டு பான்டோன் வேலிடேடட் கலர் வேகன் ஸ்கின் பினிஷன்களிலும் வாங்க கிடைக்கும்: ஃபாரஸ்ட் கிரே மற்றும் பீச் ஃபஸ்.

ஆரம்பமே ரூ.5000 OFFER..  விற்பனை ஆரம்பித்த Motorola Edge 50 Ultra 5ஜி!

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மீது கிடைக்கும் சலுகைகள்: இது மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க கிடைக்கிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.5,000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதை ரூ.54,999-க்கு பதிலாக ரூ.49,999-க்கு வாங்கலாம். கூடுதலாக எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளில் ரூ.5,000 வரையிலான தள்ளுபடியையும் பெறலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய ஹலோ யுஐ (ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டம்) கொண்டு இயங்குகிறது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், எச்டிஆர்10+ மற்றும் 2500நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.7-இன்ச் 1.5கே (1,220x2,712 பிக்சல்ஸ்) எல்டிபிஎஸ் பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஆரம்பமே ரூ.5000 OFFER..  விற்பனை ஆரம்பித்த Motorola Edge 50 Ultra 5ஜி!

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 512GB UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது; இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஓம்னி-டைரக்ஷனல் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 122 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எஃப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 அபர்ச்சர் கொண்ட 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பேஸ் அன்லாக் அம்சத்திற்கான ஆதரவையும் வழங்குகிறது. மேலும் இது நிறுவனத்தின் மோட்டோ செக்யூர் மற்றும் திங்க்ஷீல்டு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 125W டர்போபவர் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
With Rs 5000 Introductory Offer Motorola Edge 50 Ultra 5G India Sale Started Check Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X