Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர் போட்றாங்க.. ரூ 6,999-க்கு 12GB ரேம், மெட்டாலிக் ஃப்ரேம், IP54 ரேட்டிங், ஸ்லிம் பாடி!

எதிர்பார்த்ததை விட ரூ.1,500 மலிவான விலைக்கு அறிமுகமான.. ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் இந்திய விற்பனை இன்று முதல் (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) தொடங்குகிறது. அது ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) மாடலாகும். ரியல்மியின்மற்ற என் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும் சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ், கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்னஅம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ரூ 6,999-க்கு 12GB ரேம், மெட்டாலிக் ஃப்ரேம், IP54 ரேட்டிங்!

அசல் விலையை பொறுத்தவரை 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.500 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ரியல்மி நார்சோ என்61 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனை ரூ.7499 க்கு பதிலாக ரூ.6,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கும் வாங்க முடியும் . இந்த ஸ்மார்ட்போன் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ ரியல்மி இந்தியா வலைத்தளம் வழியாக இன்று ( ஆகஸ்ட் 6 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

வடிவமைப்பை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது இன்டெக்ரேடட் மெட்டாலிக் ஃபிரேம் (integrated metallic frame), வலுவூட்டப்பட்ட கிளாஸ் (reinforced glass), தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating), 7,8மிமீ ஸ்லிம் பாடியை கொண்டுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (560 nits Peak Brightness) உடனான 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டு உள்ளது.

ப்ராசஸர், ஸ்டோரேஜ் மற்றும் ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, ரியல்மி நார்சோ எம்61 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி612 சிப்செட் (Unisoc T612 Chipset) மூலம் இயங்குகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மேலும் 6ஜிபி ரேம் -ஐ சேர்த்து மொத்த ரேம்-ஐ 12ஜிபி ஆக அதிகரிக்கவும் முடியும் . இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ (Realme UI)உடன் வருகிறது.

கேமரா மற்றும் பேட்டரியை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிடப்படி, இது 32 எம்பி ப்ரைமரி கேமராவை (32MP Primary Camera) கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 5 எம்பி செல்பீ கேமரா (5MP Selfie Camera) பார்த்துக்கொள்ளும். இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது டூயல் 4ஜி (Dual 4G), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் 5.0, 3.5மிமீ ஹெட்செட் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
With Rs 500 Flat Discount Realme Narzo N61 First Sale Starts in India Today August 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X