இலவச Wireless Charger.. ரூ.4000 டிஸ்கவுண்ட்.. அதிரடியாக விற்பனையை ஆரம்பித்த புது Infinix போன்.. என்ன மாடல்? |
இந்திய சந்தையில், இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஜூன் 26 ஆம் தேதி) மதியம் 2 மணி முதல் தொடங்கியது. விலையை மீறிய சில தனித்துவமான அம்சங்களுடன் வரும் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை சலுகையின் (First Sale Offer) ஒரு பகுதியாக இலவச வயர்லெஸ் சார்ஜர் (Free Wireless Charger) கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன விலை? என்னென்ன ஆபர்கள் கிடைக்கும்? இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சுவாரசியமாக இது ஒரு மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் போதிலும், இது வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (Wireless Charging Support) வருகிறது மற்றும் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்பினிக்ஸ் மேக்பாட் (Infinix MagPad) வயர்லெஸ் சார்ஜரை (ஸ்டாக் உள்ளவரை) இலவசமாகவும் வழங்குகிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: டைட்டன் கோல்ட் (Titan Gold) மற்றும் அப்ஸிடியன் பிளக்க (Obsidian Black). முன்னரே குறிப்பிட்டபடி இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (26 ஜூன் 2024) மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
நீங்கள் இதை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்கலாம். இலவச வயர்லெஸ் சார்ஜரை தவிர்த்து, எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), ஐசிஐசிஐ (ICICI) மற்றும் எச்பிஐ (SBI) பேங்க் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 நேரடி தள்ளுபடி கிடைக்கும்; மேலும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் மற்றும் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனே 6.78 அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ 7020 சிப்செட் (MediaTek Helio 7020 SoC) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக அதிகரிக்கலாம். அதே நேரத்தில் ரேம்-ஐ 8 ஜிபி வரை அதிகரிக்கலாம். இந்த மாடல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 14 கஸ்டம் ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) மூலம் இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்கஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களை பொறுத்தவரை, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி53 ரேட்டிங் (IP53 rating), ஏஐ வாய்ஸ்-ஆக்டிவேட் ஹாலோ லைட்டிங் (AI voice-activated Halo Lighting), ஜேபிஎல்-ஆல் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers tuned by JBL), டூயல் சிம் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications