Home
Mobile

USB-C போர்ட் உடன் iPhone SE 4.. அடுத்த வாரம் முதல் விற்பனை.. 5 முக்கிய மாற்றங்கள்.. என்ன விலை?

கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான ஐபோன் எஸ்இ 3 மாடலுக்கு பிறகு ஆப்பிள் (Apple) நிறுவனம் எந்தவொரு புதிய எஸ்இ மாடலை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் மார்க் குர்மனின் சமீபத்திய ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) அல்லது ஐபோன் எஸ்இ 2025 (iPhone SE 2025) மாடலானது உடனடி அறிமுகத்திற்கு தயாராக உள்ளது.

யூஎஸ்பி டைப் சி போர்ட் உட்பட மொத்தம் 5 முக்கியமான மாற்றங்களுடன் வரும் ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடல் ஆனது அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஐபோன் எஸ்இ மாடலுடன் ஒப்பிடும் போது இதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? இது என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

USB-C போர்ட் உடன் iPhone SE 4.. அடுத்த வாரம் முதல் விற்பனை?

முதல் மாற்றம் - இது ஐபோன் 14 மாடலை போன்ற வடிவமைப்பை பெறும் (iPhone 14 Like Design): முந்தைய மாடல்களுடன ஒப்பிடுகையில், இது மிகவும் தீவிரமான டிசைன் சேன்ஞ்-ஐ பெறும். இது ஆப்பிள் ஐபோன் 14 மாடலை போன்ற வடிவமைப்பை (iPhone 14 like Design) பெறும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் 14 போன்ற நாட்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்; 6.1 இன்ச் அளவிலான பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும். பேக் டிசைனை பொறுத்த வரையில், ஐபோன் எஸ்இ 4 ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட சிங்கிள் கேமரா செட்டப்பை பின்பற்றும். இது ஒரு புதிய 48 மெகாபிக்சல் கேமராவாக இருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

இரண்டாவது மாற்றம் - ஃபேஸ் ஐடி (Face ID): ஐபோன் எஸ்இ 4 ஆனது ஃபேஸ் ஐடிக்கான ஆதரவுடன் வரும் முதல் எஸ்இ மாடலாக இருக்கும். அதாவது இந்த மாடலில் டச் ஐடி சென்சார் இருக்காது. ஐபோன் 14 போன்ற இதன் புதிய வடிவமைப்பு தான் இதற்கு காரணம். இதோடு சேர்த்து கீழே உள்ள பெசல்களும் போய்விடும், அதோடு டச் ஐடி சென்சார்-ஐ வைத்திருக்கும் ஹோம் பட்டனும் காணமால் போகலாம்.

மூன்றாவது மாற்றம் - ஆப்பிள் ஏஐ (Apple AI): ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸ் உடன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்தியது. ஐஓஎஸ் 18 கொண்டு இயங்கும் ஐபோன் எஸ்இ 4 ஆனது ஆப்பிள் ஏஐ-க்கான அணுகலை வழங்கும் மிகவும் மலிவான ஐபோன் ஆக இருக்க வாய்ப்புள்ளது. இதன்கீழ் மேம்படுத்தப்பட்ட சிரி, ஏஐ பவர்டு ரைட்டிங் டூல்ஸ், இன்டெலிஜென்ட் போட்டோ எடிட்டிங் போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

நான்காவது மாற்றம் - ஆப்பிள் ஏ18 (Apple A18): ஆப்பிள் நிறுவனம் அதன் ஏ18 சிப்செட் வழியாகவே ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் ஏஐ அம்சங்களை சேர்த்துள்ளது. ஆக ஐபோன் எஸ்இ 4 ஆனது ஆப்பிள் ஏஐ அம்சங்களை பெறும் பட்சத்தில், இதுவும் ஏ18 சிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஐந்தாவது மாற்றம் - யூஎஸ்பி-சி போர்ட் (USB-C Port): ஐபோன் எஸ்இ 4 ஆனது யூஎஸ்பி-சி போர்ட் உடன் வரும் முதல் எஸ்இ மாடலாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களும் யூ.எஸ்.பி-சி சார்ஜிங்கை ஆதரிக்க வேண்டும் என்கிற விதிமுறை தான் இந்த மாற்றத்திற்கு காரணம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களை போலவே இந்த மாடலின் யூஎஸ்பி-சிபோர்ட்டின் டேட்டா டிரான்ஸ்பர் ஸ்பீட் ஆனது யூஎஸ்பி 2.0-க்கு மட்டுப்படுத்தப்படலாம்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடலின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16-க்கான அதே விலை நிர்ணய உத்தியை பின்பற்றினால், ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடலின் இந்திய விலை சுமார் ரூ.49,900 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (Photo Credit: X | @appltrack)

More from GizBot

Best Mobiles in India

English summary
With 5 New Changes iPhone SE 4 iPhone SE 2025 Go To Sale From Next Week Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X