Home
Mobile

இந்தியாவில் நோக்கியா லூமியா 920 மற்றும் லூமியா 820

By Karthikeyan
இந்தியாவில் நோக்கியா லூமியா 920 மற்றும் லூமியா 820

அக்டோபர் 23 அன்று நோக்கியா நிறுவனம் தனது லூமியா 820 மற்றும் லூமியா 920 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இந்த இரண்டு போன்களும் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகின்றன.

இந்த இரண்டு போன்களும் அட்டகாசமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. அதாவது லூமியா 920 போன் 4.5 க்ளியர்ப்ளாக் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே சூப்பர் சென்சிட்டிவ் டச்சை சப்போர்ட் செய்கிறது.

மேலும் இந்த போனில் டூவல் கோர் 1.5 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 பேமிலி மொபைல் ப்ராசஸர் உள்ளது. அதோடு 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பும் இந்த போனில் உள்ளது. நோக்கியா மேப்ஸ், ட்ரைவ் அன்ட் ட்ரான்ஸ்போர்ட், சிட்டி லென்ஸ் போன்ற அப்ளிகேசன்களும் இந்த போனில் உள்ளன.

இந்த போனின் பின்பக்கம் 8.7எம்பி இமேஜ் சென்சார் கொண்ட ஒரு அட்டகாசமான கேமரா உள்ளது. இந்த கேமராவில் எல்இடி ப்ளாஷ் மற்றும் கார்ல் செய்ஸ் ஆப்டிக்கல் லென்சும் உண்டு. அதனால் இந்த கேமராவில் மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். அதோடு இந்த கேமராவில் 1080பி எச்டி வீடியோவையும் பதிவு செய்ய முடியும். இந்த போனில் 1.2எம்பி முகப்புக் கேமராவும் உண்டு. இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடூத் போன்ற வசதிகளும் உள்ளன.

அடுத்ததாக நோக்கியா லூமியா 820 ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் இந்த போன் 4.3 இன்ச் அளவில் ஒஎல்இடி தொடுதிரையுடன் வருகிறது. அதோடு இந்த டிஸ்ப்ளேயில் நோக்கியாவின் க்ளியர்ப்ளாக் தொழில் நுட்பமும் உண்டு. மேலும் இந்த போனில் 1.2 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 மொபைல் ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் உள்ளன.

இந்த போனின் பின்புறம் 8எம்பி இமேஜ் சென்சார், கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட கேமரா உள்ளது. இந்த போனில் நோக்கியாவின் சிட்டி லென்ஸ் அப்ளிகேசனும் உள்ளது. மேலும் அக்ஸிலரேமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-கம்பாஸ், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் கிரோஸ்கோபிக் சென்சார் போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் ப்ளூடூத், வைபை மற்றும் என்எப்சி போன்ற வசதிகளும் உண்டு. இந்த போனில் டோல்பி ஹெட்போன் சப்போர்ட் மற்றும் எச்டி வாய்ஸ் உள்ளதால் அருமையான பாடல்களையும் கேட்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X