Home
Mobile

சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டியாக விக்ட்லீகின் வேம்மி சென்சேசன் ஸ்மார்ட் போன்

By Super

சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டியாக விக்ட்லீகின் வேம்மி சென்சேசன் ஸ்மார்ட் போன்

விக்ட்லீக் என்ற மும்பயைச்சேர்ந்த நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டியாக தனது ஸ்மார்ட் போனை களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளது. முன்னதாக நோட் மற்றும் டேப்லெட்களை உற்பத்திசெய்த இந்நிறுவனம் இப்பொழுது ஸ்மார்ட் போன் சந்தையிலும் தடம்பதிக்க முடிவெடுத்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் 4.7" அளவில் இருக்கும்.இதற்கு வேம்மி சென்சேசன் என பெயரிடப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன் வெளியாகும் இந்த போனின் விலை ரூ.16,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் நுட்பக்கூறுகலாவன :

எடை மற்றும் அளவுகள்: வேம்மி சென்சேசன் 136.6 x 70.6 x 8.6 என்ற அளவிலும் 145 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.திரை: 4.7" IPS டச்ஸ்க்ரீன் மற்றும் 1280 x 720 பிக்சல் ரெசுலூசன்.ப்ராசசர்: 1.2GHZ டூயல் கோர் கார்டெக்ஸ் A9 ப்ராசசர்.இயங்குதளம்: ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச்.கேமரா: 12எம்பி ரியர் கேமரா மற்றும் 3எம்பி ப்ரண்ட் கேமரா.நினைவகம்: 4ஜிபி உள்நினைவகம், 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவுஇணைத்துக்கொள்ளும் வகையிலான மைக்ரோ SD கார்டு.இணைப்பான்கள்: WiFi, ப்ளுடூத், 3G மற்றும் உள்ளார்ந்த GPS.பேட்டரி: 2,000mAh பேட்டரியில் 4 மணிநேரம் பேசும்பொழுதும், 200 மணிநேர ஸ்டான்ட்பை வசதியும் உள்ளது.

விலை: இந்த போனின் விலை ரூ.16,000 என்று விக்ட்லீகின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டி:

முன்னர் சம்சங் கேலக்ஸி நோட்டுக்கு போட்டியாக வேம்மி நோட்டை வெளியிட்ட விக்ட்லீக் நிறுவனம் இப்பொழுது சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டியாக வேம்மி சென்சேசன் ஸ்மார்ட் போனை வெளியிடுகிறது. அதிலும் குறைந்த விலைக்கு.கேலக்ஸி S3யின் நுற்பக்கூறுகளை ஒப்பிட்டால் மிகுந்த விகிதங்களில் ஒத்துப்போகிறது என்றே சொல்லலாம். கேலக்ஸி S3யின் நுற்பக்கூறுகளாவன 4.8" சூப்பர் AMOLED திரை, 1.4GHZ குவாட்கோர் ப்ராசெசர், 1ஜிபி ரேம், 8எம்பி கேமரா, WiFi , ப்ளுடூத் மற்றும் 3G.முதலில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சண்ட்விட்சுடன் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்3யை இப்பொழுது 4.1 ஜெல்லி பீனுக்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம்.கேலக்ஸி எஸ்3, 16ஜிபியின் விலை ரூ.34,900 மற்றும் அதற்கு மேலும் கிடைக்கிறது.குறைந்த விலை, டூயல் சிம் சபோர்ட் மற்றும் அதிகமான கேமரா தரத்தினால் வேம்மி சென்சேசன் சாம்சங் கேலக்ஸி S3க்கு போட்டியாக இருக்குமென்றே சொல்லலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X