ஹூவாய் ஹானர் 4சி வாங்க வேறு என்ன காரணம் வேணும்?

Written By:

ஹானர் 4சி ஸ்மார்ட்போன் தலை சிறந்த சிறப்பம்சங்கள், வித்தியாசமான வடிவமைப்பு, சிறப்பான தோற்றம் மற்றும் கேமராவினை வழங்குகின்றது.

உலகின் சிறந்த தொழில்நுட்பத்தை வழங்கும் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் ஹூவாய் ஹானர் 4சி சிறந்த தேர்வாக இருக்கும்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் புதிய ஹானர் 4சி ஸ்மார்ட்போனினை வாங்க சிறந்த காரணங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 4சி ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. பெரிய டிஸ்ப்ளே மற்றும் அதிக பிக்சல் கொண்டிருப்பதால் திரைப்படங்களை பார்க்க இந்த டிஸ்ப்ளே சிறப்பானதாக இருக்கும். மேலும் பெரிய டிஸ்ப்ளே மூலம் டைப் செய்வதும் எளிமையாக முடிந்து விடுகின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சிறப்பான வடிவமைப்பு மற்றும் அழகான வெளிபுற தோற்றம் ஹானர் 4சி ஸ்மார்ட்போனை கவர்ச்சிகர ஒன்றாக மாற்றுகின்றது.

பேட்டரி

பேட்டரி

நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஹானர் 4சி அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 36 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்குகின்றது.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

பத்தாயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது இதன் ஸ்பீக்கர்கள் சிறப்பாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

பிராசஸர்

பிராசஸர்

ஹானர் 4சி 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 620 ஆக்டா கோர் 64 பிட் பிராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் சீராக இருக்கின்றது.

மெமரி

மெமரி

ஹானர் 4சி 2ஜிபி ரேம் கொண்டிருப்பதால் பல செயலிகளை ஒரே நேரத்தில் இயக்க வழி வகுக்கின்றது.

கூடுதல் மெமரி

கூடுதல் மெமரி

8ஜிபி ரோம் கொண்டிருக்கும் ஹானர் 4சியில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

எமோஷன் 3.0 யுஐ

எமோஷன் 3.0 யுஐ

புதிய ஹானர் 4சி ஸ்மார்ட்போனில் இருக்கும் எமோஷன் யூஸர் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த ஏதுவாக இருக்கின்றது.

கேமரா

கேமரா

சிறப்பான புகைப்படங்களை வழங்கும் 13 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு பல செட்டிங்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டிருப்பதால் புகைப்படங்களை மேலும் மெருகேற்ற முடிகின்றது.

முன்பக்க கேமரா

முன்பக்க கேமரா

வைடு ஆங்கிள் 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதால் தெளிவான மற்றும் சிறப்பான செல்பீக்களை எடுக்க முடிகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here Why You Should Upgrade to Huawei Honor 4C. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot