Home
Mobile

அலெர்ட்! கம்பேக் டா.. கெத்துடானு சொல்லி.. அவசரப்பட்டு இந்த NOKIA 5G போனை வாங்கிடாதீங்க! ஏன்னா?

ஒவ்வொரு முறையும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போதெல்லாம், அதுவொரு கம்பேக் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதும்.. ஆனால் அது நோக்கியா பிராண்ட்டின் விசுவாசிகள் மற்றும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வதும் - வழக்கமாகி விட்டது. சமீபத்தில் அறிமுகமான நோக்கியா எக்ஸ்30 5ஜி (Nokia X30 5G) உட்பட!

லேட்-ஆ வந்தாலும்.. லேட்டஸ்ட்-ஆ வந்து இருக்கு என்கிற பில்ட்-அப் வசனங்கள் நோக்கிய எக்ஸ்30 5ஜி-க்கு பொருந்தாது. ஏனென்றால் இது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதன் இந்திய விற்பனை வருகிற பிப்.20 முதல் தொடங்கவுள்ளது.

NOKIA X30 5G-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்?

NOKIA X30 ஒரு நல்ல கம்பேக் மாடலா?

உங்களுக்கு நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பற்றி எந்த கவலையும் இல்லை என்றால், ஒரு தரமான நோக்கியா 5ஜி போனை வாங்கினால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தால்.. கண்களை மூடிக்கொண்டு நோக்கியா எக்ஸ்30-ஐ வாங்கலாம்.

ஒருவேளை நீங்கள் விலை நிர்ணயத்தையும் கருத்தில் கொள்ள விரும்பினால்.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் - தற்போது இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஸ்மார்ட்போனென்றால் அது நோக்கியா எக்ஸ்30 தான். இதன் விலை நிர்ணயம் ரூ.48,999 ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நோக்கியா எக்ஸ்30 மாடலின் இந்திய விற்பனை மந்தமாகலாம்.

ஏனென்றால், இதை விட மலிவான விலைக்கு மற்றும் நோக்கியா எக்ஸ்30 5ஜி-ஐ விட நல்ல-நல்ல ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் வாங்க கிடைகின்றன. அதில் "நம்பி வாங்கலாம்" என்று நாங்கள் பரிந்துரைக்கும் டாப் 5 போன்களின் பட்டியல் இதோ:

01. Realme 10 Pro (ரியல்மி 10 ப்ரோ)

ரியல்மி 10 ப்ரோவின் விலை - நோக்கியா எக்ஸ்30-ன் விலையில் மூன்றில் ஒரு பங்காகும். ஆனால் அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை பேக் செய்கிறது இது ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.72-இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 108எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

02. POCO X5 Pro (போக்கோ எக்ஸ்5 ப்ரோ)

போக்கோ எக்ஸ்5 ப்ரோ, நோக்கியா எக்ஸ்30-க்கான மற்றொரு தகுதியான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனாகும். இது ரூ.22,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 108எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கூறலாம்.

03. Redmi Note 12 Pro (ரெட்மி நோட் 12 ப்ரோ)

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் போக்கோ எக்ஸ்5 ப்ரோவும் ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்வதால், இதுவும் நோக்கியா எக்ஸ்30 க்கான ஒரு நல்ல மாற்றாகும். இதன் விலை - ரூ.24,999.

இது ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான 50எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

04. Google Pixel 6a (கூகுள் பிக்சல் 6ஏ)

நேர்மையான விலை நிர்ணயம் மற்றும் நம்பமுடியாத கேமரா திறன்களுக்காகவே கூகுள் பிக்சல் 6ஏ மாடலை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நோக்கியா எக்ஸ்30-ஐ விட ரூ,18,000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது 6.1-இன்ச் ஃபுல் எச்டி+ OLED டிஸ்ப்ளே, 12.2எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, கூகுளின் சொந்த டென்சர் எஸ்ஓசி, 4410mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

05. iQOO 9 (ஐக்யூ 9)

நோக்கியா எக்ஸ்30 மாடலை போலல்லாமல், ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் வருகிறது. அதாவது ஒப்பீட்டளவில் இதுவொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போனாகும். இதன் விலை - ரூ.42,999.

இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.56-இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஓஐஎஸ்-எனேபிள்டு 48எம்பி மெயின் கேமரா, 4350mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை கூறலாம்.

Best Mobiles in India

English summary
Why you Should Consider These 5 Cheap and Best Alternative Smartphones for Nokia X30 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X