ரெட்மீ நோட் 4 முன்பு மோட்டோ ஜி5 ப்ளஸ் ஒண்ணுமே இல்லை, ஏன்.?
ஏன்.? எதனால்.? எப்படி.? - என்ற உங்களின் கேள்விகளுக்கு பதில்கள் இதோ.!
லெனோவா அதன் சமீபத்திய மிட்-ரேன்ஜ் பிரிவில் அதன் மோட்டோ ஜி5ப்ளஸ் கருவியையே அறிமுகம் செய்தது. வெளிப்படையாகவே அந்த கருவியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 கருவிக்கு எதிரான போட்டிக்கருவியாக விளங்குகிறது.
நிகழ்ந்து முடிந்த மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் ரூ.14.999/- ஏன விலை நிர்ணயத்தில் 5.2 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, 12 எம்.பி. பின்புற கேமராவுடன் வெளியான இந்தியாவின் சமீபத்திய மலிவு இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி அதன் போட்டியாளர் ஆன சியோமி ரெட்மீ நோட் கருவியுடன் நேருக்கு நேர் மோதினால் ஒன்றுமிலாது போகும். ஏன்.? எதனால்.? எப்படி.? - என்ற உங்களின் கேள்விகளுக்கு பதில்கள் இதோ.!

பிரீமியம் வடிவமைப்பு
இரண்டுமே மலிவு விலை கருவியாக இருப்பினும் வடிவமைப்பு என்று வரும்போது மிகவும் வெளிப்படையாகவே சியோமி ரெட்மீ நோட் 4 தற்புகழ்ச்சியான ஒரு நிலையில் உள்ளது. மேலும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியுடன் ஒப்பிடும் போது சியோமி ரெட்மீ நோட் வடிவமைப்பு ஒரு பிரீமியம் உணர்வை தருகிறது.

பெரிய டிஸ்ப்ளே
ஜி5 ப்ளஸ் அக்கருவி 5.2 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்க ரெட்மீ நோட் 4 வீடியோக்களின் அனுபவத்தை அதிகரிக்கும் (1920X1080 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.!

குறிப்பிடத்தக்க பெரிய பேட்டரி
மோட்டோ ஜி5 பிளஸ் கருவியானது ஒரு 3000எம்ஏ எச் பேட்டரித்திறன் கொண்டுருக்க மறுபக்கம் ரெட்மீ நோட் 4 அக்கருவி ஒரு 4100எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் சியோமியின் பேட்டரி காப்பு கூடுதலாக 3-4 மணி நேரம் நீடிக்கும் என்பது வெளிப்படை.!

சிறந்த செயல்திறன்
இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்ரெனோ 506 ஜிபியூ உடனான க்வால்காம் ஸ்னாபடிராகன் 625 எஸ்ஓசி 14என்எம் செயலி கொண்டிருந்தாலும் ஒப்பீட்டில் ரெட்மீ நோட் 4 கருவியானது ஒரு பிட் அளவாவது மோட்டோ கருவியை மிஞ்சும், அதற்கு டிஸ்ப்ளே, பேட்டரி ஆகியவைகள் உதவும்.

மேலும் படிக்க
சியோமி ஆதிக்கம் : ரெட்மி 4, ரெட்மி 4ஏ, ரெட்மி 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ்.!


Click it and Unblock the Notifications
