ஸ்மார்ட்போன் பேட்டரி டெக்னாலஜியை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இதுதான்

By Siva
|

எந்த ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை விட அதன் பாதுகாப்புக்குத்தான் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக பல நிறுவனங்கள் ஒரு ஸ்மார்ட்போனின் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை.

ஸ்மார்ட்போன் பேட்டரி டெக்னாலஜியை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இதுதான்

இதன் காரணமாகத்தான் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 மாடலால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. கிட்டத்தட்ட உலகின் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் கேலக்ஸி நோட் 7 மாடல் போனை தடை செய்துள்ளது. திடீர் திடீரென்று இந்த மாடலின் பேட்டரி வெடித்து எரிவதால் வேறு வழியின்றி மில்லியன் கணக்கான கேலக்ஸி நோட் 7 மாடலை இந்த நிறுவனம் திரும்ப பெற்றது.

ரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்!

இதனால் சாம்சங் நிறுவனத்திற்கு சென்ற ஆண்டு கிடைத்த லாபத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. இனி சாம்சங் எந்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டாலும் இதுவும் கேலக்ஸி நோட் 7 மாடல் போல் வெடிக்குமோ என்ற ஐயப்பாடு வாடிக்கையாளர்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

3ஜி போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி??

எனவே ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்புக்கு குறிப்பாக பேட்டரிக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

15 வருடங்களில் பேட்டரில் தரத்தில் மாற்றமில்லை:

15 வருடங்களில் பேட்டரில் தரத்தில் மாற்றமில்லை:

கடந்த 1991ஆம் ஆண்டு சோனி மற்றும் ஆசாஹி கேசேய் நிறுவனங்கள் லித்தியம்-அயன் பேட்டரியை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் 15 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த டெக்னாலஜி மாறவில்லை. மாடலுக்கு மாற்றம் வந்த போதிலும் பேட்டரியில் மாற்றம் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்மார்ட்போனின் உண்மையான புரட்சி என்ன?

ஸ்மார்ட்போனின் உண்மையான புரட்சி என்ன?

ஸ்மார்ட்போனாக இருந்தாலும், லேப்டாப் ஆக இருந்தாலும் தற்போது பயன்பாடுகள் அதிகமாக உள்ளது. குறைந்த பட்சம் ஒரு டிவைஸை ஐந்து அல்லது ஆறு வருடங்கள் உபயோகப்படுத்துகிரோம். ஒரு லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் ஸ்பீடான பிராஸசர், ரேம், பவர்புல் சென்சார் மற்றும் எனர்ஜியை சாப்பிடும் வகையில் புதுப்புது அம்சங்கள் இருக்கின்றது. ஆனால் இதற்கு சரியான தீனி போடும் அளவுக்கு பேட்டரியில் மாற்றம் செய்யப்படவில்லை.

மற்ற பொருட்களின் தரம் உயர்ந்து கொண்டே இருப்பது போல பேட்டரியின் தரமும் என்றைக்கு உயர்கின்றதோ அன்றைக்குத்தான் ஸ்மார்ட்போனின் உண்மையான புரட்சி ஏற்பட்டது என்று அர்த்தம்

எதனால் பேட்டரியில் பிரச்சனை வருகிறது?

எதனால் பேட்டரியில் பிரச்சனை வருகிறது?

தற்போது ஸ்மார்ட்போன் சந்தை கடும் போட்டியில் இருப்பதால் ஒவ்வொரு நிறுவனமும் பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களையும் அதற்குரிய பெரிய சைஸ் பேட்டரியையும் இணைத்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் பேட்டரியில் உள்ள பவர் ஸ்மார்ட்போனின் உபயோகத்திற்கு தகுந்ததாக இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். பிரஷர், அதிகப்படியான லோடு, HD மற்றும் மல்டிகோர் சிபியூ ஆகியவைகளுக்கு ஈடாக பேட்டரி இல்லை என்பதுதான் உண்மை

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்த பிரச்சனைக்கு என்னதான் வழி?

இந்த பிரச்சனைக்கு என்னதான் வழி?

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை நீக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்று கண்டுபிடித்துள்ளனர். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் ஏர் பேட்டரி இந்த பிரச்சனையை முற்றிலும் நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பு முந்தைய லித்தியம் அயன் பேட்டரியை விட பத்து மடங்கு பவர்புல் என்பதால் அனைத்து பேட்டரி பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அர்கோன்னா நேஷனல் லேபரேட்டரியும் மாற்று பேட்டரி கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. லித்தியம் சூப்பர் ஆக்சைடு பேட்டரிதான் இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. இந்த பேட்டரி ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கும் ஒருசில பொறுப்புகள் உண்டு

வாடிக்கையாளர்களுக்கும் ஒருசில பொறுப்புகள் உண்டு

ஸ்மார்ட்போன் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தை மட்டும் குறை சொல்லாமல், வாடிக்கையாளர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதிகப்படியான பயன்பாடு, சார்ஜ் செய்யும்போது உபயோகிப்பது, கார் சார்ஜரை பயன்படுத்துவது, அதிக வெப்பமான இடத்தில் அல்லது சூர்ய வெளிச்சத்தில் மொபைல் போனை வைப்பது ஆகியவற்றை தவிர்த்து பேட்டரியின் லைஃபை உயர்த்தி கொள்ளலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Smartphones have evolved significantly over years but not the batteries that powers them. Find out why the world needs the next breakthrough in battery technology.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X