சபாஷ் ஒன்ப்ளஸ்.! ஒரு சாதாரண வால்பேப்பருக்கு இவ்வளவு உழைப்பா.?!

ஒன்ப்ளஸ் பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்கள் ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஏமாற்றங்களையும் அளிக்காத ஒரு பிராண்ட் ஆகும்.

|

ஒன்ப்ளஸ் பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்கள் ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஏமாற்றங்களையும் அளிக்காத ஒரு பிராண்ட் ஆகும். வன்பொருள் அம்சங்களாக இருக்கட்டும் அல்லது மென்பொருள் அம்சங்களாக இருக்கட்டும், சரியான கலவையில், எந்த விதமாக சமரசமும் இல்லாமல், வேகமான மற்றும் புதிய செயல்திறன் எல்லைகளை தொட்டு பார்ப்பதில் ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு நிகர் ஒன்ப்ளஸ் தான்.

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் மல்டி டாஸ்கிங், பேட்டரி மற்றும் கேமரா செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகையில், சிலர் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் ஆர்கனைசேஷனில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களை திருப்தி படுத்தவும் ஒன்ப்ளஸ் தவறவில்லை.

எந்த தொந்தரவும் இல்லாமல்.!

எந்த தொந்தரவும் இல்லாமல்.!

ஒரு ஸ்மார்ட்போனின் வால்பேப்பர் ஆனது ஒரு முக்கியமான அம்சமாகும் என்று வெறுமனே கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அவைகள் தான் ஒரு எளிமையான நேவிகேஷனை வழங்குகிறது, எந்த தொந்தரவும் இல்லாமல் உங்களுக்கும் தேவையான ஆப்ஸ்களின் ஐகானை எளிமையாக காட்சிப்படுத்துகிறது என்று கூறினால் அதை ஏற்காமலும் இருக்க முடியாது. இந்த இடத்தில் தான் ஒன்ப்ளஸ் தனது சாமர்த்தியமான விளையாட்டை உருட்டியுள்ளது.

கலை ஆர்வம் மிக்க வால்பேப்பர்.!

கலை ஆர்வம் மிக்க வால்பேப்பர்.!

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ப்ரீ லோடட் அதாவது முன்னேற்றப்பட்ட வால்பேப்பர்கள் ஆனது மிகுந்த கவனத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவைகள், உலகெங்கிலும் உள்ள மக்கள், வயது, பாலினம் மற்றும் தொழிலில் ஆகியவற்றை உள்ளடக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலை ஆர்வம் மிக்க வால்பேப்பர்களாக திகழ்கின்றன. அதற்கான அத்துணை பெருமைகளையும், ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான வால்பேப்பர்களை உருவாக்கும் ஸ்வீடன் நிபுணர் ஆன ஹம்பஸ் ஓல்ஸனே ஏற்கிறார்.

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் கலைநயம் மிக்க மற்றும் ஈர்க்க கூடிய வால்பேப்பர்களுக்கு பின்னால் நிற்பது ஹம்பஸ் தான். அவர் தற்பொழுது கோவாவில் வசிக்கிறார், நிறுவனத்தின் ஆரம்பகால ஸ்மார்ட்போன்கள் தொடங்கி வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் வரையிலாக, ஒன்ப்ளஸ்-ன் கலை நயம் மிக்க பகுதியை கவனித்துக் கொள்கிறார். இவரின் மிக சிறப்பான மற்றும் அதிகம் நேசிக்கப்பட்ட வேலையாக ஒன்ப்ளஸ் 2 வால்பேப்பர்களை சுட்டிக்காட்டலாம்.

திரவ உலோக ஸ்டைல் ​​வால்பேப்பர்.!

திரவ உலோக ஸ்டைல் ​​வால்பேப்பர்.!

ஒன்ப்ளஸ் 2 ஆனது ஒரு சுத்தமான, பளபளப்பான நீல நிற பாணியைக் கொண்டிருந்தது. அது மற்ற ஸ்மார்ட்போன்களின் வால்பேப்பர்களின் கூட்டத்தில் இருந்து தனித்து காணப்பட்டது. ஒன்ப்ளஸ் X-க்கு, ஹம்பஸ் திரவ உலோக ஸ்டைல் ​​வால்பேப்பர்களை கையாண்டார். அது மிக இயல்பானதாக இருந்தது, அதே சமயம் மக்களின் ரசனையை பரிசோதனை செய்யும் வேலையையும் பார்த்தது.

ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி-ல் பல மாற்றங்கள்.!

ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி-ல் பல மாற்றங்கள்.!

ஒன்ப்ளஸ் 3 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, ஒரு 3டி வடிவத்திலான மலை, அழகிய அக்ரிலிக் பிரஷ் ஸ்ட்ரோக்ஸ் வழியாக உருவாக்கம் பெற்றது. ஒன்ப்ளஸ் 3டி-ஐ பொறுத்தவரை, ஹம்பஸ் மிகவும் சுருக்கமான, வெப்பமான மற்றும் இன்னும் தீவிரமான வண்ணங்களை கையாண்டார். நிறுவனத்தின் மிகச் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி-யில் வால்பேப்பர் பாணியில் பல மாற்றங்கள் காட்சிப்பட்டது. ஒரு எளிய பின்னணியில், மிதக்கும் பொருட்களை போன்ற வால்பேப்பரை அறிமுகப்படுத்தியது. அந்த வால்பேப்பர்கள் ஒரு எளிமையான, இன்னும் சுத்தமான உணர்வை வெளிப்படுத்தியது. அதன் பின்னர் ஹம்பஸ், இரண்டு தீவிரமான கலைப்படைப்பை தொடர்ந்தார் - ஒன்று ஒரு பனிக்கட்டி குகை, மற்றொன்று சூடான எரிமலைகள்.

மிகவும் துடிப்பான மற்றும் மிகவும் பொருத்தமான வால்பேப்பர்.!

மிகவும் துடிப்பான மற்றும் மிகவும் பொருத்தமான வால்பேப்பர்.!

அடுத்து வரவிருக்கும், ஒன்ப்ளஸ் 6-ஐ பொறுத்தவரை, ஹம்பஸ் தனது கடந்தகால அனுபவத்தை கொண்டு இன்னும் சுத்தமான, திரவ பாணியிலான மலைப்பாங்கான ஆழத்துடன் கூடிய வால்பேப்பர்களை பயன்படுத்துகிறார். ஸ்வீடனை சேர்ந்த இந்த வடிவமைப்பு கலைஞர், இதுநாள் வரை ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்காக மிகவும் துடிப்பான மற்றும் மிகவும் பொருத்தமான வால்பேப்பர்களை உருவாக்கியுள்ளார், இன்னும் உருவாக்குவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Why OnePlus wallpapers make lasting impressions on us every time. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X