இதுதான் OnePlus.. 150W சார்ஜிங், 9000mAh பேட்டரி, 1மிமீ பெசல் 185Hz டிஸ்பிளே.. வேற ரகத்தில் ஒரு புது போன்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது - கடந்த ஆண்டிலேயே 'ரெஃப்ரெஷ் ரேட்' (refresh rate) விஷயத்தில் தனது தரத்தை உயர்த்தி இருந்தாலும் கூட, வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடலானது - கடந்த பல ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் மேற்கொள்ளும் மிக முக்கியமான மற்றும் சிறப்பான டிஸ்பிளே மேம்பாடுகளில் ஒன்றாக அமையக்கூடும் என்பது போல் தெரிகிறது
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள புதிய தகவலின்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது நான்கு பக்கங்களிலும் 1 மிமீ-க்கும் குறைவான மிகவும் ஸ்லிம் ஆன பெஸல்களையும் (bezels), 185ஹெர்ட்ஸ் வரையிலான ஸ்க்ரீன் ரெஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

குறிப்பிட்ட டிப்ஸ்டர், இது எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் இடம்பெறும் என்கிற மாடல் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், அதன் சிறப்பம்சங்கள் ஒன்பிளஸ் 16 தொடர்பான முந்தைய தகவல்களுடன் மிக நெருக்கமாக பொருந்துகின்றன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பெரும்பாலான பிளாக்ஷிப் லெவல் பிராண்டுகள் பெரிய பேட்டரிகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்க்ரீனில் தரம் மற்றும் வடிவமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள்: லீக் ஆன தகவலின்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது - குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் மற்றும் BOE வழங்கிய 6.78-இன்ச் 1.5K டிஸ்பிளேவுடன் சோதிக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் ரெஃப்ரெஷ் ரேட்டாக தெரிகிறது.
முந்தைய அறிக்கைகள், ஒன்பிளஸ் நிறுவனம் மிக அதிக ரெஃப்ரெஷ் ரேட்களை ஆராய்ந்து வருவதாகவும், சில யூகங்கள், ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 240ஹெர்ட்ஸ் பேனல் பேக் செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால் சமீபத்திய தகவல், ஒன்பிளஸ் நிறுவனம் 240ஹெர்ட்ஸ்-க்கு பதிலாக 185ஹெர்ட்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கக்கூடும் என்று கூறுகிறது.
ரெஃப்ரெஷ் ரேட்களை 200ஹெர்ட்ஸ்-க்கு மேல் அதிகரிப்பது டிஸ்பிளேவின் தரத்தை பாதிக்கத் தொடங்கக்கூடும் என்றும், ரியல் லைஃப்பில்இது குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்காமல் போகலாம் என்றும் டிப்ஸ்டர் டிஜிட்டல் ஸ்டேஷன் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால், ஒன்பிளஸ் நிறுவனம் எண்களை பின்தொடர்வதை விட, மென்மையான செயல்பாடு, படத் தரம் மற்றும் பவர் கன்சம்ப்ஷன் சிக்கனம் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலைக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும்.
நினைவூட்டும் வண்ணம் முந்தைய மாடலில் (ஒன்பிளஸ் 13 மாடலில்) 120ஹெர்ட்ஸ் ஆக இருந்த ரெஃப்ரெஷ் ரேட்டை, ஒன்பிளஸ் 15 மாடலில் 165ஹெட்ஸ் ஆக உயர்த்தியது, ஆனால் டிஸ்பிளேவின் தரத்தை 1.5K ஆக குறைத்தது. முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஒன்பிளஸ் 16 டிஸ்பிளே - ப்ரைட்னஸ், கலர் ரீபுரொடெக்ஷன் மற்றும் பவர் கன்சம்ப்ஷன் ஆகியவற்றில் மேம்பாடுகளை கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பெசல் குறித்த தகவல் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கக்கூடும். லீக் ஆன தகவலின்படி, டிஸ்பிளேவின் நான்கு பக்கங்களிலும் 1 மிமீ-க்கும் குறைவான பெசல்கள் இடம்பெறக்கூடும். இது சாத்தியமானால், ஒன்பிளஸ் 16 ஆனது சந்தையில் மிகவும் கண்கவர் அனுபவத்தை தரும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறும்.
மேலும் இந்த துறையில் மிகக் குறுகிய பெசல்களை கொண்ட ஸ்மார்ட்போன் ( narrowest bezels in the industry) ஆகவும் இது விளங்கக்கூடும். ஒப்பீட்டளவில், மீஸு 22 (Meizu 22) ஸ்மாட்போன் ஆனது தற்போது சுமார் 1.2 மிமீ பெசல்களுடன் இந்த சாதனையை தன்வசம் வைத்திருக்கிறது.
மேலும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டியும் பேசுபொருள் ஆகலாம். டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக் ஆனது 9000mAh அளவை நெருங்கக்கூடிய ஒரு பெரிய பேட்டரியை குறித்த முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
இந்த பேட்டரி 100W - 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒன்பிளஸ் செயல்திறனுடன் பேட்டரியின் நீடித்த உழைப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications